சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் | பிரபாஸ் படத்தில் இணைந்த மாளவிகா மோகனன் | விஜய் 67வது படத்திற்காக கெட்டப்பை மாற்றிய அர்ஜுன் | 15 ஆண்டு பகை - விஜய்யுடன் பேசுவதற்கு தயாராக இருக்கும் நெப்போலியன்! | சூர்யாவின் வாடிவாசல் படத்தில் இணைந்த அவதார் கிராபிக்ஸ் குழு! | சிம்புவிற்கு பதிலாக பிரதீப் ரங்கநாதன்! | நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட திடீர் எச்சரிக்கை நோட்டீஸ் | பிப்ரவரி 4ம் தேதி வெளியாகும் விஜய் 67 அறிவிப்பு வீடியோ! | தோல்வியில் முடிந்த மோகன்லாலின் பரிசோதனை முயற்சி |
சுரேஷ் காமாட்சி இயக்கியுள்ள, மிக மிக அவசரம் படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா, நேற்று இரவு 7 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கே.பாக்யராஜ், சீமான் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய திருச்சி விநியோகஸ்தர் ஸ்ரீதர் பேசும்போது, பொங்கலுக்கு வெளியான பேட்ட, விஸ்வாசம் என்ற இரண்டு படங்களில் எந்த படம் அதிகமாக வசூலித்துள்ளது என்கிற சர்ச்சை இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஆனால் உண்மையான வசூல் என்பது யாருக்குமே தெரியாது. ஒரு விநியோகஸ்தர்கள் என்பதால் அது எனக்கு நன்றாக தெரியும்.
ஆனபோதும் வரி பிரச்சினைகள் இருப்பதால் இந்த படங்களின் உண்மையனா வசூல் தொகையை நான் வெளிப்படையாக சொல்ல முடியாது. ஆனால் ரஜினியின் பேட்ட படத்தை விட அஜீத்தின் விஸ்வாசம் 10 கோடி ரூபாய் அதிகமாக வசூலித்துள்ளது. அதை என்னால் உறுதியாக சொல்ல முடியும் நிரூபிக்கவும் முடியும் என்று பேசினார்.
ஆக, தொடர்ந்து இணையதளங்களில் விவாதப்பொருளாக இருந்து வரும் பேட்ட, விஸ்வாசம் படங்களின் வசூல் குறித்த ஒரு தகவலை சொல்லி இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விநியோகஸ்தர் ஸ்ரீதர்.