Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சர்காரை நெருங்கிய விஸ்வாசம்

31 ஜன, 2019 - 15:07 IST
எழுத்தின் அளவு:
Viswasam-touched-Sarkar-collection

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை தமிழக அளவில் முதன்முதலில் 120 கோடியை வசூல் செய்த படம் என்ற சாதனையை நிகழ்த்தியது விஜய் நடித்த சர்கார் படம் தான். அதன் பிறகு வெளியான ஷங்கரின் 2.0 படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கும் வகையில் 125 கோடியை வசூல் செய்தது.

இந்நிலையில் ஜனவரி 10 அன்று வெளியான விஸ்வாசம் படம், வெளியான 8 நாட்களிலேயே தமிழகத்தில் 125 கோடி வசூல் செய்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. விஸ்வாசம் படம் பேட்ட படத்தைவிட அதிகமாக வசூல் செய்திருக்கிறது என்பது போன்ற பொய்யான தோற்றத்தை உண்டாக்குவதற்காக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டார் விஸ்வாசம் படத்தின் தமிழ்நாடு விநியோகஸ்தர்.

அவருடைய அறிவிப்பு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 125 கோடி வசூல் என்று அவர் அறிவித்த அன்றைய தேதியில் சுமார் 55 கோடியை மட்டுமே விஸ்வாசம் படம் வசூல் செய்திருந்தது. இந்த உண்மை தெரியாமல் 125 கோடி வசூல் என்ற பொய்செய்தியை சோஷியல்மீடியாக்களில் ஷேர் செய்து கொண்டாடினர். சிலர் பேட்ட படத்தை விட விஸ்வாசம் அதிகமாக வசூல் செய்திருப்பது உண்மைதான், ஆனால் 125 கோடி வசூல் என்பதை நம்ப முடியவில்லை என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உண்மையில் விஸ்வாசம் படம் எவ்வளவு தொகையை வசூலித்துள்ளது? ஜனவரி 10 முதல் ஜனவரி 29 வரையிலான 20 நாட்களில் 120 கோடியை நெருங்கியிருப்பதாக விநியோகஸ்தர்கள் வட்டாரம் தெரிவிக்கிறது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
அமைதியாக வரும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்'அமைதியாக வரும் 'வந்தா ராஜாவாதான் ... திருமண எண்ணத்தை தள்ளி வைத்த தமன்னா திருமண எண்ணத்தை தள்ளி வைத்த தமன்னா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

serupalaiye adipen - ohio,யூ.எஸ்.ஏ
02 பிப், 2019 - 16:51 Report Abuse
serupalaiye adipen சர்க்கார் படம் 450 கோடின்னு விஜய் ரசிகர்கள் வட சுட்டுட்டு இருந்தானுக .. அப்போ என்ன பண்ணிட்டு இருந்தீங்க... சர்க்கார் படம் 2 weeksku அப்பறம் theatrelaiye இல்ல ... விசுவாசம் running for more than 3 weeks.
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
02 பிப், 2019 - 06:06 Report Abuse
J.V. Iyer விஸ்வாசம் ஒரு சிறந்த படம். ரசித்தேன். பேட்டையை விட நன்றாக இருந்தது. பாவம் ரஜனி. இனிமேலும் ஏன் சண்டை காட்சிகள்? அவருக்கு அமிதாப் பச்சனை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. சூப்பர் ஸ்டாருக்கு அரசியலுக்கும் இஷ்டமில்லை, படமும் போனியாகவில்லை. என்ன செய்வது.
Rate this:
Vijay - Chennai,இந்தியா
31 ஜன, 2019 - 16:56 Report Abuse
Vijay விஸ்வாசம் பேட்டையை விட அதிகம் வசூல் செய்துவிட கூடாது.
Rate this:
31 ஜன, 2019 - 15:42 Report Abuse
dabara கூ பால் ஆறிய வடைகள் ஒரு புரம் இருக்க சூடான வடை தயாரா.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in