மிஸ்டர் லோக்கல் டீசர் வெளியீடு | பெப்சி தலைவராக ஆர்.கே.செல்வமணி மீண்டும் தேர்வு | ஆகஸ்டில் வெளியாகும் அஜீத்தின் பிங்க் ரீமேக்? | அனுராக் காஷ்யப் இயக்கும் படத்தில் ஷாலினி பாண்டே | அதர்வா பட பாடலை வெளியிட்ட தனுஷ் | ஆர்யா-சாயிஷா காதல் திருமணம் அல்ல: சாயிஷாவின் அம்மா | 'கென்னடி கிளப்' படம்; கபடிதான் கதைக் களம் | காதலர் படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி | குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன்? | சீரியலிலும் லிப்லாக் முத்தக்காட்சி வந்தாச்சு |
தெலுங்கில் 2013ம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்று பங்குத் தொகையாக மட்டும் 75 கோடியைக் கொடுத்து சுமார் 175 கோடி வசூலைப் பெற்ற படம் 'அத்தாரின்டிக்கி தாரேதி'.
பவன் கல்யாண், சமந்தா, பிரணிதா, நதியா மற்றும் பலர் நடித்த இந்தப் படம், பவன் கல்யாண் நடித்த படங்களிலேயே ஒரு இனிமையான, சுவாரசியமான படம் என்ற பெயரைப் பெற்றது. சமந்தாவின் கதாபாத்திரம், நதியாவின் கதாபாத்திரம், அதில் அவர்களது நடிப்பு என படம் இப்போதும் தெலுங்கு ரசிகர்களை பேச வைத்துக் கொண்டிருக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு படத்தை தமிழில் ரீமேக் செய்து, எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் நாளை 'வந்தா ராஜாவாதான் வருவேன்' என ஒரு ராஜாவுக்குரிய வரவேற்புடன் வெளியிடாமல் ஒரு தொண்டர் படம் போல வெளியிடுகிறார்கள். அது திரையுலகத்தில் உள்ளவர்களையும் சிம்பு ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இந்தப் படத்திற்காக இதுவரை எந்த ஒரு பத்திரிகையாளர் சந்திப்பும், இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவும் நடைபெறவில்லை. இப்படி ஒரு படம் வெளிவருகிறது என்பது சிம்பு ரசிகர்களைத் தவிர மற்றவர்களுக்குத் தெரியுமா என்பதும் ஆச்சரியம்தான். இத்தனைக்கும் படத்தைத் தயாரித்த நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் தான், தற்போது தமிழ் சினிமாவில் மிகப் பெரும் தயாரிப்பு நிறுவனம். அப்படியிருக்கையில் எப்படி இந்தப் படத்தை இப்படி ஒரு குறைவான சுய விளம்பரத்துடன் வெளியிடுகிறார்கள் என்பது தெரியவில்லை.
இதற்கு முன் இந்நிறுவனம் தயாரித்து வெளியிட்ட '2.0' படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்த்த சாதனை வசூல் கிடைக்கவில்லை என்பதால் இருக்கலாம் என கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.