விஜய் 68 : முதல் பாடலுக்கு நடனம் அமைக்கும் பிரபுதேவா | அஜர்பைஜான் கிளம்பிய அஜித் - த்ரிஷா : ஒரு வழியாக துவங்குகிறது ‛விடாமுயற்சி' | 32 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி - அமிதாப் கூட்டணி : வந்தாச்சு அறிவிப்பு | ரஜினி படத்தில் இணைந்தார் பஹத் பாசில் | ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா |
ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டையை சேர்ந்த பெண் பிரபாவதி, அங்குள்ள காவல் நிலையத்தில் "நடிகை பானுப்பிரியா, தனது 14 வயது மகள் சந்தியாவை வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்றார். கடந்த 18 மாதமாக சம்ளமும் கொடுக்கவில்லை. சந்தியாவை, பானுப்ரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி வருகிறார்" என்று புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் சாமர்லகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஆனால், நடிகை பானுப்பிரியா இதை மறுத்தார். தன் வீட்டில் இருந்த பொருட்களை சந்தியா திருடியதாகவும், அதை கண்டுபிடித்துவிட்டதால் தங்கள் மீது அபாண்ட பழி போடுகிறார்கள் என்றார்.
இந்தச்சூழலில், சென்னையில் உள்ள பானுப்பிரியா வீட்டில் வேலை பார்த்த சிறுமி சந்தியாவை, குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள் மீட்டனர். அதேசமயம் 14 வயதி சிறுமியை, பானுப்பிரியா வேலைக்கு அமர்த்தியதால், குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்பட்டது.
இந்நிலையில், ஆந்திராவைச் சேர்ந்த குழந்தைகள் நல உரிமை ஆணையம், சிறுமியை வேலைக்கு அமர்த்திய பானுப்பிரியா மீதும், கோபாலகிருஷ்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அம்மாநில டிஜிபிக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
இந்தவிவகாரத்தில் நடிகை பானுப்பிரியா மீது விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.