விவாகரத்து பற்றிய கேள்விக்கு விழா மேடையில் அதிரடி பதிலளித்த ஸ்வாதி | மைசூர் மியூசியத்தில் இருந்து பிரபாஸின் பாகுபலி சிலை விரைவில் அகற்றம் | ராஷ்மிகாவுடன் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன் : முன்னாள் காதலர் ஓபன் டாக் | மம்முட்டிக்கும், சந்திரமுகி-2க்கும் வழிவிட்டு ஒதுங்கிய குஞ்சாக்கோ கோபன் | 'லியோ' சர்ச்சைகளுக்கு இடையில் ஷாரூக்கானுக்கு வாழ்த்து சொன்ன விஜய் | 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பாளர் : சவுந்தர்யா ரஜினிகாந்த் | 'ராசி' பட விழா ரத்துக்கு காரணம் இதுதானா ? | 'லியோ' விழா ரத்து பாலோ-அப் : உள் குத்தா, அரசியல் குத்தா ? | ஏ.ஆர்.ரஹ்மான் மீது போலீசில் புகார் | சிம்பு 48வது படத்தில் இணைந்த கே.ஜி.எப் பிரபலம் |
கேரளாவில் வெளியாகும் தமிழ் படங்களுக்கு, மலையாள படங்களை விட அதிகமான வரவேற்பு ரசிகர்களிடமும் தியேட்டர் அதிபர்களிடம் இருந்து வருகிறது. இது மலையாள திரையுலகில் உருவாகும் படங்களின் வசூலை பல நேரங்களில் பதம் பார்த்துவிடுகிறது என்கிற குற்றச்சாட்டு மலையாள திரைப்பட தயாரிப்பாளர்களால் இருந்து அவ்வப்போது வைக்கப்பட்டு வந்தது.
அதன்படி, கேரள திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், தமிழ் படங்களை கேரளாவில் வெளியிடுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளனர் அதாவது ஒரு தமிழ் படம் இனிமேல் கேரளாவில் அதிகபட்சம் 125 தியேட்டர்களில் மட்டுமே வெளியாக முடியும்.
அதேபோல மலையாளத்தில் வெளியாகும் படங்கள் அதிகபட்சமாக 160லிருந்து 170 தியேட்டர்கள் வரை மட்டுமே ரிலீஸ் செய்யமுடியும். மலையாளத்திலேயே மிக பிரம்மாண்டமாக உருவாகும் படங்களுக்கு மட்டும் விதிவிலக்காக அதிக தியேட்டர்கள் ஒதுக்கப்படும் என்கிற முடிவை அவர்கள் நடைமுறைப்படுத்த உள்ளனர்.