Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பேரன்பு அனுபவம் : மம்முட்டி நெகிழ்ச்சி

30 ஜன, 2019 - 14:58 IST
எழுத்தின் அளவு:
Mammootty-shares-about-Peranbu-experience

ராம் இயக்கத்தில் மம்மூட்டி நாயகனாக நடித்துள்ள படம் பேரன்பு. பிப்ரவரி 1-ந்தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் மம்முட்டியுடன் அஞ்சலி, சாதனா, அஞ்சலி அமீர், சமுத்திரகனி உள்பட பலர் நடித்துள்ளார்கள்.

இப்படத்தின் பத்திரிக்கையாளர்கள் காட்சியில் பங்கேற்ற மம்முட்டி பேசும்போது, பத்து வருடங்களுக்குப்பிறகு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறேன். இந்த படத்தின் கதையை டைரக்டர் ராம் சொன்னபோது பிடித்துப்போனது. ஒரு அப்பா - மகளுக்கான கதை. பிறவியிலேயே கை - கால்கள் ஊனமாக பிறகும் ஒரு குழந்தை. அதன்காரணமாகவே அவளது தாய் வேறொருவருடன் ஓடிப்போய் விடுகிறார்.

இப்படியான சூழ்நிலையில், அந்த குழந்தையை தந்தை எப்படி வளர்க்கிறார் என்ற இந்த கதை என்னை ரொம்பவே பாதித்தது. கஷ்டப்பட்டு நடித்தேன் என்று சொல்வதை விட இயல்பாக நடித்தேன். அதேபோல் எனக்கு மகளாக நடித்துள்ள சாதனாவும் இந்த கேரக்டருக்காக ரொம்பவே உழைத்திருக்கிறார். அஞ்சலி ஒரு முக்கியமான கேரக்டரில் வந்து கதைக்கு பலம் சேர்த்துள்ளார்.

அந்தவகையில் ஒரு நல்ல உணர்வுப்பூர்வமான படத்தை எடுத்திருக்கிறார் டைரக்டர் ராம். இதுவரை இந்த படம் எங்களிடம் இருந்தது. இப்போது உங்களிடம் ஒப்படைத்து விட்டோம். நீங்கள் நல்லபடியாக மக்களிடம் கொண்டு சேர்ப்பீர்கள் என்று நம்புகிறோம் என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்சேதுபதி உதவி செய்தும் பயனில்லாமல் மூதாட்டி மரணம்விஜய்சேதுபதி உதவி செய்தும் ... பையா சாயலில் தேவ் பையா சாயலில் தேவ்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in