Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசு கடமை தவறினாலும் ஆசிரியர்கள் கடமை தவற கூடாது : கமல்

29 ஜன, 2019 - 19:16 IST
எழுத்தின் அளவு:
Teachers-should-do-their-duty-says-Kamal

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப அரசு கோரிக்கை வைத்தது. ஆனால் அவர்கள் கேட்கவில்லை.

இதையடுத்து பணிக்கு வராத ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் வேலைகளில் அரசு இறங்கியது. இதனால் அனேக இடங்களில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். இருந்தாலும் சில ஊர்களில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இதுப்பற்றி நடிகரும், மக்கள் நீதி மைய தலைவருமான கமல்ஹாசன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது : கல்வியாளர்களை காப்பது அரசின் கடமை. கல்வியை காப்பது கல்வியாளர்களின் கடமை. அரசு கடமை தவறினாலும், ஆசிரியர் கடமை தவறலாகாது.

தேர்வு நெருங்கும் வேளையில் நாளைய நம்பிக்கையாம், மாணவர்களின் கல்வியை காப்பது நமது கடமை. பேச்சு வார்த்தைகள் உரிமைக்காய் தொடருட்டும். கல்விச்சாலைகள் கடமைக்காய் திறக்கட்டும். எட்டு கோடித் தமிழர்களின் உணர்வுகளின் சார்பாய் இதுவே என் குரல் என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
சுவீடன் திரைப்பட விழாவில் வஸந்த் படம்சுவீடன் திரைப்பட விழாவில் வஸந்த் ... அமைதியான அகோரி : ஜாக்கி ஷெராப் அமைதியான அகோரி : ஜாக்கி ஷெராப்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Tamil - Trichy,இந்தியா
30 ஜன, 2019 - 08:46 Report Abuse
Tamil கமலின் குரல் சாமானிய மக்களின் எண்ணமாக தெரிகிறது. மக்கள் நீதி மையம் பெயர்க்கு ஏற்றாற்போல் அமைந்துள்ளது உங்கள் பதிவு. மற்ற கட்சிகள் எல்லாம் இந்த பிரச்சனையை அரசியல் லாபம் அடையத்தான் பார்க்கிறார்கள். ஆனால் உங்கள் பதிவு மாணவர்களின் தேர்வு நேரத்தில் மிகவும் பயனுள்ளது. வாழ்த்துக்கள் கமல் ஜி.
Rate this:
karutthu - nainital,இந்தியா
30 ஜன, 2019 - 08:26 Report Abuse
karutthu இவர் அப்படி சொல்லிட்டா கிடைக்கிற ஓட்டும் கிடைக்காதோ என்ற பயம் தான் .
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
30 ஜன, 2019 - 08:23 Report Abuse
Srinivasan Kannaiya இவர்களை வளரவிட்டது திராவிட முன்னேற்ற கழகம்தான்
Rate this:
surendernath.s - bamgalore,இந்தியா
30 ஜன, 2019 - 08:06 Report Abuse
surendernath.s கமலிடம் தற்போது பேச்சு,நிதானம்,பொறுப்பு இவை காட்டுகிறது. இது ஒரு நல்ல மாற்றம், வெறும் எதிர்ப்பு அரசியல், உணர்ச்சிகர போராட்டம் மட்டுமே வெற்றி தராது. விவேகம் தேவை.
Rate this:
ராஜேஷ் - பட்டுக்கோட்டை ,இந்தியா
30 ஜன, 2019 - 06:17 Report Abuse
ராஜேஷ் நீங்க ஏன் மனநோயாளி மாதிரி பொலம்பிகிட்டே இருக்கீங்க ? ஒரு நல்ல ஆசிரியர் என்ன செய்யணுமோ செய்தார்களா ?
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in