Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'வெக்கை' நாவல் தான் 'அசுரன்'

29 ஜன, 2019 - 16:59 IST
எழுத்தின் அளவு:
Asuran-movie-is-based-on-Vekkai-Novel

'வட சென்னை' படத்திற்குப் பிறகு இயக்குனர் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ள படம் 'அசுரன்'. இப்படம் பூமணி எழுதிய 'வெக்கை' நாவலைத் தழுவி எடுக்கப்படும் படம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

சாகித்ய அகாடமி விருது பெற்ற பூமணி, 1982ம் ஆண்டு எழுதிய நாவல்தான் 'வெக்கை'. 15 வயது சிறுவன் ஒருவன், கொலை செய்கிறான். பின்னர் அப்பாவுடன் தலைமறைவு வாழ்க்கை வாழ்கிறான். நீதிமன்றத்தில் சரணவடைவதற்கு முன்பு அவனது வாழ்க்கை எப்படியெல்லாம் பயணிக்கிறது என்பதுதான் அந்த நாவலின் கதை. அரசியல், சாதி, உறவு முறைகள், பாசம் என நகரும் இந்த நாவல் பலருக்கும் பிடித்த ஒரு நாவல்.

நாவலை படமாக்கப் போவதாக அதன் எழுத்தாளர் பூமணியிடம் எப்போதே சொல்லியிருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன். 'பொல்லாதவன், வட சென்னை' படங்களில் சென்னையைக் கதைக்களமாக வைத்த வெற்றிமாறன், 'ஆடுகளம்' படத்தில் மதுரையைக் கதைக்களமாக வைத்தார். 'வெக்கை' நாவல் கரிசல் மண்ணைக் கதைக்களமாகக் கொண்ட கதை.

'அசுரன்' படத்தில் தனுஷ், மஞ்சு வாரியர் ஆகியோர் நடிக்க உள்ளதாக மட்டுமே தற்போது தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமான அப்பா கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்பது இன்னும் வெளியிடப்படவில்லை. 'அசுரன்' படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான தடத்தைப் பிடிக்கும் என்று இப்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
'விஸ்வாசம்' 150 கோடி வசூல் ?'விஸ்வாசம்' 150 கோடி வசூல் ? புருவ அழகிக்கு கண்ணை சிமிட்டுவது போரடித்து விட்டதாம் புருவ அழகிக்கு கண்ணை சிமிட்டுவது ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bhaskaran - Chennai,இந்தியா
29 ஜன, 2019 - 17:03 Report Abuse
Bhaskaran கரிசல் எழுத்தாளர் பூமணி மிகவும் அபாரமாக எழுதக்கூடியவர் அவரது பிறகு என்னும் நாவல் ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளியின் அற்புதமான கதை தினமலர்வாசகர்கள் கண்டிப்பாக படிக்கவேண்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in