Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'விஸ்வாசம்' 150 கோடி வசூல் ?

29 ஜன, 2019 - 16:52 IST
எழுத்தின் அளவு:
Viswasam-collected-Rs.150-crore.?

ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட', அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு படங்களும் போட்டி போட்டு வெளியாகி, அதே போட்டியில் வசூலையும் குவித்தன. மூன்றாவது வாரத்தைக் கடந்தும் இரண்டு படங்களும் பல தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன.

படம் வெளியான ஒரு வாரத்திலேயே இரண்டு படங்களில் எந்தப் படம் 100 கோடி வசூலைக் கடந்தது என்ற பரபரப்பு எழுந்தது. 'பேட்ட' தயாரிப்பாளர் தரப்பில் 11வது நாளில்தான் 100 கோடி வசூலை அவர்களது படம் தொடும் என்றார்கள். ஆனால், அதற்குப் பதிலடியாக 'விஸ்வாசம்' வினியோகஸ்தர் 8வது நாளிலேயே 125 கோடியை அவர்களது படம் கடந்ததாக அறிவித்தார்கள்.

இப்போது 'விஸ்வாசம்' படம் 150 கோடியைக் கடந்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது. 8 நாளில் 125 கோடியைக் கடந்ததாக அறிவித்தவர்கள், மேற்கொண்டு 11 நாளில் கூடுதலாக 25 கோடி வசூலித்ததா அல்லது அதற்கு மேலும் வசூலித்ததா என்று இன்னும் அறிவிக்கவில்லை.

'பேட்ட' படம் 11வது நாளில் 100 கோடியைக் கடக்கும் என்று சொன்னவர்களும் படம் 100 கோடியைக் கடந்ததா அல்லது அதற்கு மேலும் கடந்ததா என்று இதுவரை சொல்லவில்லை.

சமூகவலைத்தளம், யு டியுப் ஆகியவற்றில் பலரும் பலவிதமாக அதிகாரப்பூர்வமற்ற தவறான வசூல் நிலவரங்களைத் தெரிவித்து வருகின்றனர். அவற்றைத் தடுக்க சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களே அவர்களது படங்களின் வசூலை அறிவிக்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அது 'பேட்ட, விஸ்வாசம்' படத்தில் முழுமையாக நடக்குமா என்பதை அவர்கள்தான் அறிவிக்க வேண்டும்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
பிப்ரவரி 1 போட்டியில் 5 படங்கள்பிப்ரவரி 1 போட்டியில் 5 படங்கள் 'வெக்கை' நாவல் தான் 'அசுரன்' 'வெக்கை' நாவல் தான் 'அசுரன்'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

JMK - Madurai,இந்தியா
31 ஜன, 2019 - 12:29 Report Abuse
JMK யூட்டு நாளில் 125 கோடி 11 நாளில் வெறும் 150 கோடி தான எங்கேயோ இடிக்குதே ?
Rate this:
30 ஜன, 2019 - 13:03 Report Abuse
விவேக் 150 கோடி பைசா
Rate this:
30 ஜன, 2019 - 05:32 Report Abuse
Arul Krish 1500 chores as per latest report
Rate this:
30 ஜன, 2019 - 00:31 Report Abuse
DNS.udpm sarkar 250cro....thirutu vadai....sutta vadai..
Rate this:
29 ஜன, 2019 - 19:03 Report Abuse
Kumar Kamaraj Petta already crossed worldwide collection of Rs.237 crores in 17 days.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in