Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிப்ரவரி 1 போட்டியில் 5 படங்கள்

29 ஜன, 2019 - 15:33 IST
எழுத்தின் அளவு:
5-movies-releasing-on-Feb-1

2019ம் ஆண்டு முதல் மாதமான ஜனவரி மாதத்தில் இரண்டு பெரிய படங்களான 'பேட்ட, விஸ்வாசம்' ஆகிய படங்கள் மூன்று வாரங்களை வெற்றிகரமாக நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு படங்களுக்குமான தியேட்டர்கள் பிப்ரவரி 1ம் தேதி முதல்தான் பாதிக்கும் மேலாகக் குறைய வாய்ப்புள்ளது. அன்றைய தினம் புதிதாக 5 படங்கள் வருவதால்தான் அந்த நிலை.

சிம்பு, மேகா ஆகாஷ், கேத்தரின் தெரேசா நடித்துள்ள 'வந்தா ராஜாவாதான் வருவேன்', ஜி.வி.பிரகாஷ்குமார், அபர்ணா பாலமுரளி நடித்துள்ள 'சர்வம் தாள மயம்', மம்முட்டி, அஞ்சலி நடித்துள்ள 'பேரன்பு', சரண், அய்ரா மற்றும் பலர் நடித்துள்ள 'சகா', அரசு, டோனா சங்கர் நடித்துள்ள 'பேய் எல்லாம் பாவம்' ஆகிய படங்கள் வெளிவருகின்றன.

மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்வு நடைபெறும் என்பதால் பிப்ரவரி மாதம் பல படங்களை வெளியிட போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 8ம் தேதி வெளியாக உள்ள படங்களைப் பற்றி இன்னும் எந்த அறிவிப்பும் வரவில்லை.

பிப்ரவரி 14, காதலர் தினத்தன்று கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் நடிக்கும் 'தேவ்' படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மேலும் சில படங்கள் வெளிவரலாம். பிப்ரவரி 22ம் தேதியன்று 'தடம்' படம் வெளியாவதாக அறிவித்துள்ளார்கள். பிப்ரவரி வெளியாக உள்ள மற்ற படங்களைப் பற்றிய அறிவிப்புத் தேதி விரைவில் வெளியிடப்படலாம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
20 ஆண்டுகள் நிறைவில் 'துள்ளாத மனமும் துள்ளும்'20 ஆண்டுகள் நிறைவில் 'துள்ளாத மனமும் ... 'விஸ்வாசம்' 150 கோடி வசூல் ? 'விஸ்வாசம்' 150 கோடி வசூல் ?

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
29 ஜன, 2019 - 17:17 Report Abuse
Vasudevan Srinivasan இதில் போட்டியெல்லாம் ஒன்றுமில்லை அவரவர்களின் படங்கள் அவரவர்களின் வியாபாரம் அவரவர்களின் லாப நஷ்டங்கள்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in