Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

20 ஆண்டுகள் நிறைவில் 'துள்ளாத மனமும் துள்ளும்'

29 ஜன, 2019 - 15:07 IST
எழுத்தின் அளவு:
Thulladha-Manamum-Thullum-completes-20-years

எழில் இயக்கத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைப்பில், விஜய், சிம்ரன் மற்றும் பலர் நடித்து 20 வருடங்களுக்கு முன்பு இதே தினத்தில் வெளிவந்த படம் 'துள்ளாத மனமும் துள்ளும்'. 175 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிய படம்.

விஜய் நடித்து வெளிவந்த காதல் படங்களில் 'காதலுக்கு மரியாதை' படத்திற்குப் பிறகு இந்தப் படத்திற்கும் தனி இடமுண்டு. இந்தப் படத்தில் மிக மிக மென்மையான ஒரு நாயகனாக நடித்திருப்பார் விஜய். அவருடைய நடிப்பும், கதாபாத்திரமும் பலருக்கும் பிடித்த ஒன்று.

படத்தில் எஸ்.ஏ.ராஜ்மார் இசையில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டான பாடல்கள். “மேகமாய் வந்து போகிறேன்..., இன்னிசை பாடி வரும்..., இருபது கோடி நிலவுகள்..., தொட தொடு எனவே...” ஆகிய பாடல்களை அப்போது அடிக்கடி ஒளிபரப்பாத டிவி சேனல்களே இல்லை.

இந்தப் படம் தெலுங்கில் நாகார்ஜுனா நடிக்க 'நுவ்வு ஒஸ்தாவனி' என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு பெரிய வெற்றியைப் பெற்றது. கன்னடம், பெங்காலி, ஒரியா, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

விஜய்யின் வெற்றியையும், இமேஜையும் உயர்த்திய படங்களில் 'துள்ளாத மனமும் துள்ளும்' படத்திற்கும் முக்கிய இடமுண்டு.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் ஹாட் போட்டோ வெளியிட்ட இலியானாமீண்டும் ஹாட் போட்டோ வெளியிட்ட ... பிப்ரவரி 1 போட்டியில் 5 படங்கள் பிப்ரவரி 1 போட்டியில் 5 படங்கள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Bhaskaran - Chennai,இந்தியா
01 பிப், 2019 - 07:16 Report Abuse
Bhaskaran பழையகால சார்லி சாப்ளினை கதையான சிட்டி லைட்ஸ் அந்தக்காலராஜி என் கண்மணி என்னும் திரைப்படம் எடுக்கப்பட்டது அதை காலத்துக்கு ஏற்ப மாறுதலுடன் இந்தப்படம் நன்றாக எடுக்கப்பட்டு ஓடியது
Rate this:
Vijay -  ( Posted via: Dinamalar Android App )
29 ஜன, 2019 - 18:37 Report Abuse
Vijay அருமையான படம்
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
29 ஜன, 2019 - 17:55 Report Abuse
Sathish என் இளமை காலகட்டத்தில் மறக்கமுடியாத படம். "இருபது கோடி நிலவுகள் கூடி" அந்த பாடலை கேட்கும்போதெல்லாம் இழந்த எனது காதலியின் நினைவுகள் என்னை ஆட்கொள்ளும். கண்களை குளமாக்கும் அந்த நினைவுகளை மீண்டும் மலரவைத்த தினமலருக்கு நன்றி.
Rate this:
29 ஜன, 2019 - 21:03Report Abuse
JayapandiVery cute filim...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in