32 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி - அமிதாப் கூட்டணி : வந்தாச்சு அறிவிப்பு | ரஜினி படத்தில் இணைந்தார் பஹத் பாசில் | ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா | சித்தா படத்திற்கும், காவிரி பிரச்னைக்கும் தொடர்பில்லை : சித்தார்த் | இரட்டை சகோதரிகள் கதாநாயகியாக வெற்றி |
பாலிவுட்டை பொறுத்தவரை தற்போதும் நம்பர் ஒன் ஸ்தானத்தில் இருப்பவர் ஷாருக்கான் தான். ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக அவருக்குள் இருந்துவரும் தீராத மனக்குறை ஒன்று சமீபத்தில் விழா ஒன்றில் அவர் பேசும்போது வெளிப்பட்டது. பொதுவாகவே முன்னணி ஹீரோக்களில் இருந்து வளரும் ஹீரோக்கள் வரை எல்லா நடிகர்களுக்கும் கட்டாயம் போலீஸ் கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் இருக்கும்.
ஆனால், நடிகர் ஷாருக்கான் நடிக்க வந்த இந்த 25 ஆண்டுகளில் அவர் ஒரு முறை கூட போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. அப்படி போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க தன்னை யாரும் அணுகவில்லை என சமீபத்தில் நடைபெற்ற மும்பை போலீஸ் நடத்திய ஒரு விழாவில் கலந்து கொண்டு தன் மனக்குமுறலை வெளியிட்டார் ஷாருக்கான்.
அவருடன் இந்த விழாவில் கலந்துகொண்ட ரன்பீர் கபூரும், தானும் நடிக்க வந்து இந்த பத்து வருடங்களில் தன்னையும் யாரும் போலீஸ் கேரக்டரில் நடிக்க அழைக்கவில்லை என்பதையும் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
உடனே ஷாருக்கான் எங்கள் இருவரில் எனக்கு முதலில் போலீஸ் கேரக்டர் வரட்டும் நான் நடிக்கிறேன் என்று கூறினார்.. உடனே ரன்பீர் கபூர், ஷாருக் கான் போலீசாக நடிக்கும் அதே படத்தில் நான் கான்ஸ்டபிளாக நடிக்கவும் தயார் தனது ஆசையை வெளிப்படுத்தினார்.