15 நிமிடம் குறைந்த 'தேவ்' படம்! | சினிமா பெண்கள் அமைப்பு முட்டாள்தனமான ஒன்று ; லட்சுமிமேனன் தாக்கு | வாட்ஸ் அப்பில் இருந்து வெளியேறிய மோகன்லால் | பொன்னியின் செல்வனிலிருந்து விலகினார் விஜய் சேதுபதி? | விஜய் பிரமாதமான டான்சர்: ரமேஷிடம் தகவல் பகிர்ந்த அஜித் | சபரிமலை விவகாரத்தில் பிருத்விராஜ் கருத்து | தியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப் | அமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர் | மனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா? | அட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன் |
இப்போது விவசாயத்தை மையமாக கொண்டு நிறைய படங்கள் வெளிவருகிறது. விவசாய நிலத்தில் தொழிற்சாலைகள் கட்டப்பட்டு விவசாயம் அழிக்கப்படுவதை படங்கள் பேசுகிறது. ஆனால் 50 வருடங்களுக்கு முன்பே அன்பளிப்பு என்கிற படம் விவசாயநிலப் பிரச்சினையை பேசி இருக்கிறது.
ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கிய இந்தப் படத்தில் சிவாஜி, சரோஜாதேவி, விஜயநிர்மலா, ஜெய்சங்கர், நம்பியார், பண்டரிபாய், நாகேஷ், வி.கே.ராமசாமி உள்பட பலர் நடித்திருந்தார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார்.
விவசாயத்தை உயிராக நேசிப்பவர் சிவாஜி. பல ஏக்கர் நிலம் அவருக்கு சொந்தமாக இருக்கிறது. அவரது காதல் மனைவி சரோஜாதேவி. சிவாஜியின் தங்கை விஜயநிர்மலா. எல்லோரும் ஒரே குடும்பமாக வாழ்கிறார்கள். சிவாஜியின் பள்ளித் தோழன் ஜெய்சங்கர். அமெரிக்காவில் படித்து விட்டு இங்கு தொழில் அதிபராக இருக்கிறார். அவருக்கு ஒரு தொழிற்சாலை கட்ட சிவாஜியின் விவசாய நிலங்கள் வேண்டும். ஆனால் அதை சிவாஜி தர மாட்டார் என்று தெரியும்.
இதனால் ஜெய்சங்கரின் நிதி ஆலோசகரான நம்பியார் நிலத்தை அபகரிக்க திட்டம் வகுத்துக் கொடுக்கிறார். அதன்படி சிவாஜியின் தங்கை விஜயநிர்மலாவை காதலித்து அவளை திருமணம் செய்து சீதனமாக நிலத்தை பெற திட்டமிடுகிறார் ஜெய்சங்கர். சிவாஜி நிலத்தை விற்றாரா, ஜெய்சங்கர் விவசாய நிலத்தின் அருமையை உணர்ந்தாரா என்பதுதான் படத்தின் கதை. படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 1969ம் ஆண்டு வெளியான இந்தப் படத்திற்கு இது பொன்விழா ஆண்டு.