800 கோடி வசூலைக் கடந்த 'பதான்' | கீதா கோவிந்தம் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேரகொண்டா | மீண்டும் நடிக்கிறார் தங்கர் பச்சான் | பாபி சிம்ஹாவை புறக்கணித்த தமிழ் ஹீரோக்கள் | எனக்கு ஜாதி பிடிக்காது : மேனனை உதறித் தள்ளிய சம்யுக்தா | 92வது வருடத்தில் தெலுங்கு சினிமா | 3வது முறை கிராமி விருது வென்று அசத்திய இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் | போட்டியாக இருந்த சீரியலுக்கே ஹீரோவாக என்ட்ரி கொடுத்த சிபு சூரியன் | ராடானுடன் கைகோர்த்த எஸ்.ஏ.சந்திரசேகர்! விரைவில் சின்னத்திரை என்ட்ரி | கவர்ச்சிக்கு வயது தடை கிடையாது ? : இத்தனை வயதிலும் அசத்தும் ஸ்ரேயா |
இயக்குனர் ஏ.வெங்கடேஷ் தயாரித்து, இயக்கி உள்ள படம் நேத்ரா. இதில் வினய், தமன் குமார், சுபிக்ஷா, ரித்விகா, மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர், இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜெயப்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். படம் தயாராகி நீண்ட நாள் கிடப்பில் கிடந்த இந்தப் படத்தை நடிகர் தியாகராஜன் தனது ஸ்டார் மூவீஸ் சார்பில் வெளியிடுகிறார். இதுகுறித்து இயக்குனர் வெங்கடேஷ் கூறியதாவது:
எனக்கு ஒரு திகில் படம் இயக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதற்காகவே இந்த கதையை தயார் செய்தேன். கதை வெளிநாட்டில் நடப்பதால் கனடா நாட்டில் 95 சதவிகித படப்பிடிப்பு நடந்தது. திகில் படமாக இருந்தாலும், காமெடி செண்டிமென்ட் கலந்து உருவாகி உள்ளது. தற்போது படத்தை தியாகராஜன் வெளியிடுகிறார். வருகிற பிப்ரவரி 7ந் தேதி வெளிவருகிறது. என்றார்.