Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

ஒய்.எஸ் ஜெகன் தேதிக்காக காத்திருக்கும் மம்முட்டி படம்

27 ஜன, 2019 - 11:34 IST
எழுத்தின் அளவு:
mammooty-yartra-waiting-for-jeganmohan-reddy

தெலுங்கில் மம்முட்டி நடிப்பில் உருவாகியுள்ள படம் யாத்ரா. மகி ராகவ் என்பவர் இயக்கியுள்ள இந்த படம் மறைந்த ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் அரசியல் வாழ்க்கையையும் அவரது அரசியல் பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த பாதயாத்திரையை மையப்படுத்தியும் உருவாகியுள்ளது. ராஜசேகர ரெட்டியின் கேரக்டரில்தான் மம்முட்டி நடித்துள்ளார்.

இந்தப் படம் வரும் பிப்ரவரி-9ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. தற்போது படக்குழுவினர் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் விறுவிறுப்பாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாத இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் மிகப் பிரம்மாண்டமான புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.


அதில் கலந்து கொள்வதற்கு ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனான, ஒய்.எஸ்.ஜெகனிடம் தேதி கேட்டு காத்திருக்கின்றனர். இந்த படத்தை முழுவதுமாக பார்த்துவிட்ட ஜெகன், படம் தனது தந்தையின் புகழ்பாடும் விதமாக திருப்தியாக வந்திருப்பதை அடுத்து சந்தோஷத்தில் இருக்கிறாராம் அதனால் நிச்சயம் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என படக்குழுவினர் உறுதியாக நம்புகின்றனர்


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கோபிசந்த் படத்தில் நடிக்க மறுத்த ராய் லட்சுமிகோபிசந்த் படத்தில் நடிக்க மறுத்த ... மம்முட்டியுடன் கைகோர்த்த ஜெய் மம்முட்டியுடன் கைகோர்த்த ஜெய்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Kannitheevu
    • கன்னித்தீவு
    • நடிகை : வரலெட்சுமி ,ஆஸ்னா சவேரி
    • இயக்குனர் :சுந்தர் பாலு
    Tamil New Film Watchman
    • வாட்ச்மேன்
    • நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார்
    • நடிகை : சம்யுக்தா ஹெக்டே
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Indian 2
    • இந்தியன் 2
    • நடிகர் : கமல்ஹாசன்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :ஷங்கர்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in