சபரிமலை விவகாரத்தில் பிருத்விராஜ் கருத்து | தியாக வீரர்களுக்கு ரூ.5 லட்சம் நிதி : அமிதாப் | அமைதிப்படைக்கு பிறகு எல்கேஜி : தயாரிப்பாளர் | மனைவி படத்தை இப்படியெல்லாம் வெளியிடலாமா? | அட்லிக்கு நன்றி: விக்னேஷ் சிவன் | உலகை வியக்க வைத்த சென்னை சிறுவனின் இசை வாசிப்பு | விமர்சனம் பார்த்து பண்ண வேண்டும் : பேரரசு எச்சரிக்கை | ஒரே நாளில் ஆட்டம் கண்ட 'ஒரு அடார் லவ்' | 'எ.நோ.பா.தோ' ரிலீஸ், தனுஷ் ரசிகர்கள் மகிழ்ச்சி | திரையுலகில் அமிதாப்பச்சனின் 50 ஆண்டுகள் |
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் ஆஸ்தான டிரம்ஸ் வாசிப்பாளர் சிவமணி. அவருடன் பல படங்களில் பயணித்திருப்பவர், அரிமாநம்பி படத்தில் இசையமைப்பாளராகவும் களமிறங்கினார். தொடர்ந்து கணிதன் படத்திற்கு இசையமைத்தார்.
இசை துறையில் இவரது பங்களிப்பை கவுரவித்து மத்திய அரசு, பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. இதற்கு நன்றி தெரிவித்திருக்கிறார் சிவமணி.
அவர் கூறுகையில், "என் 45 ஆண்டுகால இசைப்பணிக்கு கிடைத்த அங்கீகாரம் பத்ம விருது. எந்த பிரதிபலனும், விருதுகளும் எதிர்பாராமல் என் துறையில் சிறப்பாக வேலை செய்தேன். நான் செய்யாத முயற்சிகளே இல்லை. அதற்கு அங்கீகாரம் தான் இந்த விருது கிடைத்துள்ளது. என் தாயாருக்கு விருதை சமர்ப்பிக்கிறேன். ரசிகர்களுக்கு நன்றி" என கூறியுள்ளார்.