‛பொன்னியின் செல்வன்' பார்க்க மாட்டேன்: திரைப்பட இயக்குனர் லெனின்பாரதி | வெகுமதியாய் கொடுத்த ரூபாயை பிரேம் போட்டு வச்சுருக்கேன்: 'ருக்மணி' பாபு | தமிழில் ரீமேக் ஆகும் ஹிந்தி படம்! | ரீ என்ட்ரி குறித்து நெகிழ்ச்சியாக பகிர்ந்த மீரா ஜாஸ்மின்! | ஆர்யா - ஹிப் ஹாப் ஆதி படங்களின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? | எஸ்.ஜே.சூர்யா- பிரியா பவானி சங்கரின் லிப்லாக் காட்சியுடன் வெளியான பொம்மை டிரைலர்! | டென்மார்க்கிற்கு சுற்றுப்பயணம் சென்ற சூர்யா - ஜோதிகா! | தருமை ஆதீனத்திடம் ஆசி பெற்ற ரஜினிகாந்தின் இளைய மகள் | லியோ படத்தின் உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்! | விக்ரம் பிரபு புதிய படத்தின் ரிலீஸ் தேதி இதோ! |
கலை, இலக்கியம், விளையாட்டு, சமூக சேவை உள்ளிட்ட பல துறைகளில் சாதித்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2019ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 112 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் நாட்டின் இரண்டாது உயரிய விருதான பத்மவிபூஷண் விருது 4 பேருக்கும், 14 பேருக்கு பத்மபூஷண் விருதும், 91 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.
மோகன்லாலுக்கு பத்மபூஷண்
சினிமா துறையை பொறுத்தமட்டில் இந்தாண்டு மலையாள நடிகர் மோகன்லாலுக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான இவர், 40 ஆண்டுகளாக 300க்கும் அதிகமான படங்களில் நடித்து, சினிமாவில் தன் பங்களிப்பை கொடுத்து வருகிறார். ஏற்கனவே 2001ம் ஆண்டு பத்மஸ்ரீ பட்டம் பெற்றுள்ளார். 5 முறை தேசிய விருதும் பெற்றிருக்கிறார்.
பத்மஸ்ரீ விருதுகள்
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் நடிகரும், இயக்குநரும், டான்ஸ் மாஸ்டருமான பிரபுதேவா, இசையமைப்பாளர் டிரம்ஸ் சிவமணி, பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன், பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் உள்ளிட்டவர்களுக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பிரபுதேவா
நடன கலைஞராக சினிமா பயணத்தை தொடங்கி, நடன அமைப்பாளராக, நடிகராக, இன்று இயக்குநராக வளர்ந்து நிற்கிறார் பிரபுதேவா. தன் ஆபார நடன திறமையால் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என பெயர் எடுத்தவர் பிரபுதேவா. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் இவர் பிரபலம்.