Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அமெரிக்காவில் 3வது வாரத்தில் 'பேட்ட'

25 ஜன, 2019 - 16:57 IST
எழுத்தின் அளவு:
Petta-continue-3rd-in-US

உலக அளவில் முன்னணியில் இருக்கும் ஒரே தமிழ் நடிகர் ரஜினிகாந்த் என்பது 'பேட்ட' படம் மூலம் மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது. 'பேட்ட' படத்திற்குப் போட்டியாக ரிலீஸ் செய்யப்பட்ட 'விஸ்வாசம்' படம் தமிழ்நாட்டில் 'பேட்ட' வசூலை முறியடித்தாலும் வெளிநாடுகளில் 'பேட்ட' வசூலை நெருங்க முடியாமல் போய்விட்டது.

ஜனவரி 10ம் தேதியன்று அமெரிக்காவில் மட்டும் சுமார் 300 தியேட்டர்கள் வரை 'பேட்ட' படம் வெளியானது. பிரிமீயர் காட்சிக்கான டிக்கெட்டுகள் மட்டும் 20 யுஎஸ் டாலர் வரை விற்கப்பட்டது. 'சிவாஜி' படத்திற்குப் பிறகு ரஜினி நடித்த படத்தின் பிரிமியர் டிக்கெட்டுகள் அவ்வளவு விலைக்கு இப்போதுதான் விற்கப்பட்டுள்ளன. பிரிமீயர் காட்சி டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பே விற்றுத் தீர்ந்துவிட்டன.

அமெரிக்க வசூலாக 20 லட்சம் யுஎஸ் டாலரைக் கடந்து வசூலாகியுள்ள 'பேட்ட' படம் மூன்றாவது வாரத்திலும் 41 தியேட்டர்களில் இந்த வாரமும் ஓடுகிறது. வழக்கமான டிக்கெட் கட்டணத்திற்கு இப்போது கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாம். 25 லட்சம் யுஎஸ் டாலரைக் கடந்து 30 லட்சம் யுஎஸ் டாலரை இந்த வாரம் நெருங்கினால் அமெரிக்காவைப் பொறுத்தவரையில் அது பெரிய வசூல்.

தமிழ்நாட்டில் 'பேட்ட' படம் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நாளை, நாளை மறுநாள் விடுமுறை தினம் என்பதால் பல தியேட்டர்களில் ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பரில் வெளிவந்த '2.0' படமும் சென்னையில் இரண்டு தியேட்டர்களில் இப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது என்பது கூடுதல் தகவல்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
'கார்ட் வீல்' செய்ய சமந்தா பயிற்சி'கார்ட் வீல்' செய்ய சமந்தா பயிற்சி சுட்டுப் பிடிக்க உத்தரவு டிரைலர் வெளியீடு சுட்டுப் பிடிக்க உத்தரவு டிரைலர் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

JMK - Madurai,இந்தியா
31 ஜன, 2019 - 12:20 Report Abuse
JMK இனிமேலாவது அஜித்/விஜய் போன்ற லோக்கல் நடிகர்களை ரஜினியோடு காம்பரே பண்ணாதீங்க? தமிழ் இல்ல உலகஅளவில் பேட்ட தான் முதல் விசுவாசம் எல்லாம் அதுக்கு கீழ தான்
Rate this:
26 ஜன, 2019 - 15:58 Report Abuse
vasantharaj நல்லா முட்டு குடுங்க
Rate this:
26 ஜன, 2019 - 01:49 Report Abuse
Kumar kamaraj பேட்ட வசூல் கம்மி என்று, தமிழ் நாட்டிலும் வசூலில் பேட்ட தான் நம்பர் ஒன். தலைவர் பாணியில் கடைசி தடவையாக உன்னை மன்னித்து விடுகிறேன்.
Rate this:
KS -  ( Posted via: Dinamalar Android App )
25 ஜன, 2019 - 20:29 Report Abuse
KS The only Box office King, Thalaivar
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Asuran
    • அசுரன்
    • நடிகர் : தனுஷ்
    • நடிகை : மஞ்சு வாரியர்
    • இயக்குனர் :வெற்றிமாறன்
    Tamil New Film Ayogya
    • அயோக்யா
    • நடிகர் : விஷால்
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :வெங்கட் மோகன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in