Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருமணத்திற்காக காத்திருந்த ராஜா

25 ஜன, 2019 - 11:48 IST
எழுத்தின் அளவு:
Rajavukku-check-waits-for-Thirumanam

நீண்ட இடைவெளிக்கு பிறகு சேரன் நடித்து, இயக்கி இருக்கும் படம் திருமணம். தற்போது இந்தப் படத்தின் பணிகள் முடிந்து விட்டது. விரைவில் வெளிவர இருக்கிறது. இதற்கிடையில் திருமணம் படம் தொடங்கப்படுவதற்கு முன்பே சேரன் நடிக்க தொடங்கிய படம் ராஜாவுக்கு செக். இதனை ஜெயம் ரவி நடித்த மழை படத்தை இயக்கிய ராஜ்குமார் இயக்கி உள்ளார்.

சேரன் ஜோடியாக சிருஷ்டி டாங்கே, சரயூ மோகன், நந்தனா வர்மா நடித்துள்ளனர். மலையாள தயாரிப்பாளர்கள் சோமன் பல்லாட், தாமஸ் பல்லாட் தயாரித்துள்ளனர். எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார், வினோத் யஜமானியாக இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தின் பணிகளும் முடிந்து விட்டாலும் சேரன் தனது ரீ எண்ட்ரியின் முதல் படமாக திருமணம் வெளிவர வேண்டும் என்று விரும்பியதால் ராஜாவுக்கு செக் அதற்காக காத்திருந்தது. இப்போது பணிகளை முடுக்கி விட்டு சேரனின் திருமணத்திற்கு பிறகு வெளியிட இருக்கிறார்கள். இதுகுறித்து படத்தின் இயக்குனர் ராஜ்குமார் கூறியதாவது:

எமோஷனல் த்ரில்லாராக உருவாகியுள்ள 'ராஜாவுக்கு செக்', இதுவரை தமிழ் சினிமாவில் வந்திராத ஒரு ஜானரை சேர்ந்த படம். படப்பிடிப்பு ஆரம்பித்து நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில்தான், சேரன் தனது 'திருமணம்' படத்தையும் உருவாக்கிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் 'ராஜாவுக்கு செக்' படத்தில் சேரனுக்கு ஒரு கெட்டப் மாற்ற வேண்டியிருந்தது. அதைக் கணக்கிட்டு, அவர் திருமணம் படத்தில் நடித்து முடித்துவிட்டு வந்ததும், அவரது கெட்டப்பினை மாற்றி அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினோம். சென்சார் சான்றிதழ் மற்றும் தயாரிப்பாளர் சங்க தேதி ஒதுக்கீடு ஆகிய விஷயங்களுக்குப் பிறகு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து முறையாக அறிவிக்கப்படும் என்கிறார் இயக்குநர் ராஜ்குமார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய்க்கு மீண்டும் வில்லனான டேனியல் பாலாஜிவிஜய்க்கு மீண்டும் வில்லனான டேனியல் ... ஆல்பம் இயக்குனரான பா.ரஞ்சித் ஆல்பம் இயக்குனரான பா.ரஞ்சித்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
25 ஜன, 2019 - 18:52 Report Abuse
Vasudevan Srinivasan எதை செய்தாலும் அதனை திருந்த செய்வதில் சேரன் அவர்கள் கில்லாடி.. அவரது 'திருமணம்' மற்றும் 'ராஜாவுக்கு செக்' ஆகிய படங்கள் வெற்றிபெற வாழ்த்துக்கள்.. ஒரே ஒரு மனக்குறை.. சேரனின் 'பாண்டவர் பூமி' 'ஆட்டோகிராப்' ஆகிய படங்களுக்கு அமர்க்களமாக இசையமைத்த 'பரத்வாஜ்' அவர்களை விட்டுவிட்டாரே என்பதுதான்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in