விஜய் 68 : முதல் பாடலுக்கு நடனம் அமைக்கும் பிரபுதேவா | அஜர்பைஜான் கிளம்பிய அஜித் - த்ரிஷா : ஒரு வழியாக துவங்குகிறது ‛விடாமுயற்சி' | 32 ஆண்டுகளுக்கு பின் இணைந்த ரஜினி - அமிதாப் கூட்டணி : வந்தாச்சு அறிவிப்பு | ரஜினி படத்தில் இணைந்தார் பஹத் பாசில் | ரிபெல் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | எனக்கு யார் அறிவுரையும் தேவையில்லை : எதிர்நீச்சல் நந்தினி | இளமை ததும்பும் ஸ்ருதி ராஜ் லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ஜாலியாக ஊர்சுற்றும் சின்னத்திரை த்ரீ ரோஸஸ் | ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் | மீண்டும் வந்தார் ‛புன்னகை பூ' கீதா |
தனது வீட்டில் வேலை பார்த்த சிறுமியை சித்ரவதை செய்ததாக நடிகை பானுப்பிரியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், சிறுமி தங்கள் வீட்டில் இருந்த நகை, பணத்தை திருடியாக பானுப்பிரியா குற்றம்சாட்டி உள்ளார்.
ஆந்திர மாநிலம் சாமர்லகோட்டை காவல் நிலையத்தில் திரைப்பட நடிகை பானுப்பிரியா வீட்டில் சந்தியா என்கிற சிறுமி வேலை பார்க்கிறார். இவரின் தாய் பிரபாவதி, பானுப்பிரியா மீது புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:
பொருளாதார ரீதியாக மிகவும் கீழ் நிலையில் இருக்கும் நான், என்னுடைய 14வயது மகள் சந்தியாவை, திரைப்பட நடிகை பானுப்பிரியா வீட்டிற்கு வேலைக்கு அனுப்பி வைத்தேன். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்து, என் மகளை அவர்கள் அழைத்து சென்றனர். ஆனால் கடந்த 18 மாதங்களாக சம்பளம் கொடுக்கவில்லை.
சமீபத்தில் வேறு ஒருவரின் மொபைல் போன் மூலம் என்னுடன் பேசிய என் மகள், பானுப்பிரியாவின் அண்ணன் கோபாலகிருஷ்ணன், தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துகிறார் என்று கூறினாள். இதுபற்றி கேட்பதற்காக பானுப்பிரியா வீட்டிற்கு சென்றேன். ஆனால் அங்கிருந்தவர்கள், "உன்னால் முடிந்ததை செய்துகொள், எங்களிடம் பணம் உள்ளது, எங்களுக்கு செல்வாக்கும் உள்ளது. உன் மகள் மீது திருட்டுக் குற்றம் சுமத்தி ஜெயிலுக்கு அனுப்பி விடுவோம். உன் மகள் வேண்டும் என்றால் 10 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து கூட்டி கொண்டு போ" என்று கூறி என்னை கழுத்தை பிடித்து இருந்து வெளியேற்றி விட்டனர். எனவே, இந்த விஷயத்தில் போலீசார் தலையிட்டு நீதி கிடைக்க உதவ வேண்டும்" என்று கூறியிருந்தார்.
பிரபாவதியின் புகார் மனுவை ஏற்றுக்கொண்ட போலீசார், பானுப்பிரியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
சிறுமி திருடியதாக பானுப்பிரியா குற்றச்சாட்டு
தன் மீதான குற்றச்சாட்டு குறித்து பானுப்பிரியா கூறுகையில், என் வீட்டில் இருந்த விலையுர்ந்த கைக்கடிகாரங்கள், சிறிய கேமரா, செல்போன், நகை மற்றும் பணத்தை, சந்தியா திருடி அவரின் தாயாரிடம் கொடுத்திருக்கிறார். இதுப்பற்றி நாங்கள் அவரிடம் விசாரித்தபோது முதலில் மறுத்தவர், பின்னர் நாங்கள் போலீஸ்க்கு போவோம் என்றதும் உண்மையை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரின் அம்மாவிடம் பேசினோம். அவரும் திருடிய பொருட்களை திருப்பி தருவதாக கூறி, என் வீட்டிற்கு வந்து கைக்கடிகாரங்கள், கேமரா மற்றும் செல்போனை கொண்டு வந்து கொடுத்தார். நகை மற்றும் பணத்தை திரும்ப வந்து தருவதாக கூறி சென்றவர் இப்போது என் மீது புகார் கூறி மாற்றி பேசியிருக்கிறார்.
இதுப்பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, 14 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு வைத்து கொண்ட குற்றத்திற்காக பானுப்பிரியா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.