பாகிஸ்தான் பாடகரை நீக்கிய சல்மான்கான் | மகிழ்ச்சியில் ஒரு அடார் லவ் நூரின் ஷெரீப் | தனுஷ் - த்ரிஷாவுக்கு ஆசியா விஷன் 2019 விருது | முடங்கி கிடந்த படத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்த மம்முட்டி | ஆதித்யா வர்மா ஆன அர்ஜூன் ரெட்டி ரீ-மேக் | சிவகார்த்திகேயன் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் | ஹிந்தி பாடலை போட்டு பாடலின் காட்சியை படமாக்கிய சீனுராமசாமி | மே மாதம் சிவகார்த்திகேயனின் இரண்டு படங்கள் ரிலீஸ் | சூப்பர் ஹீரோவாகிறார் ஜெய் | 43 ஆண்டுகளுக்குப்பிறகு பரத நாட்டியமாடிய சுஹாசினி |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் குமார். இவரின் மைத்துனர், அதாவது நடிகை ஷாலினியின் சகோதரர் ரிச்சர்ட். இவரும் பல ஆண்டுகளாக பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அவருக்கான இடம் இன்னும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், தற்போது வச்சி செஞ்சுட்டான் என்கிற படத்தில் நடிக்கிறார். ஆண்டாள் ரமேஷ் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
இதில் கலந்து கொண்ட பிறகு நம்மிடம் பேசிய ரிச்சர்ட் : சமூகத்திற்கு ஒரு முக்கிய செய்தி சொல்கிற படமாக இது இருக்கும். ஐடியில் வேலை பார்க்கும் நபராக நடித்திருக்கிறேன். திருமண வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்கள் உள்ளிட்ட பல பிரச்னைகளை பேசும் படமாக இருக்கும். நல்ல கதைக்களுக்காக காத்திருக்கிறேன். தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். நேரம் வரும்போது எனக்கான இடம் கிடைக்கும். அஜித்துடன் கண்டிப்பாக இணைந்து நடிக்க மாட்டேன். குடும்பம் வேறு, சினிமா வேறு என்கிறார்.