Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பேட்ட, விஸ்வாசம்' வசூல், இறங்குமுகம்

22 ஜன, 2019 - 19:01 IST
எழுத்தின் அளவு:
Petta,-Viswasam-collection-dull-from-third-week

2019ம் ஆண்டின் முதல் பெரிய படங்களாக ஜனவரி 10ம் தேதி 'பேட்ட, விஸ்வாசம்' ஆகிய படங்கள் வெளிவந்தன. இரண்டு படங்களுமே முதல் நாளிலிருந்தே கடுமையான போட்டியுடன் வசூலைக் குவித்து வந்தன.

இரண்டு படங்களில் எந்தப் படம் பெரிய வசூல் என்ற சர்ச்சையின் காரணமாக இரண்டு படங்களுக்குமே இலவச விளம்பரம் கிடைத்தது. பொங்கல் விடுமுறை நாட்களிலும், கடந்த ஞாயிறு வரையிலும் இரண்டு படங்களும் பல தியேட்டர்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாகவும், சில தியேட்டர்களில் 90 சதவீதம் வரையிலும் நிரம்பின.

பொங்கல் விடுமுறை முடிந்து அனைவரும் அவரவர் பணிக்குத் திரும்பிவிட்டதால் நேற்றிலிருந்து இரண்டு படங்களுக்குமான வசூல் பாதிக்கும் மேல் குறைந்துவிட்டது.

பல தியேட்டர்களில் பகல் காட்சிகளில் பாதி தியேட்டர் நிரம்பினாலே பெரிய விஷயமாக இருக்கிறதாம். மாலை நேரக் காட்சிகளில் மட்டும் பாதிக்கும் மேல் தியேட்டர்கள் நிறைகின்றன என்கிறார்கள்.

சிட்டி தியேட்டர்களைப் பொறுத்தவரையில் 'பேட்ட' படத்திற்கும், பி அன்ட் சி சென்டர்களில் 'விஸ்வாசம்' படத்திற்கும் இப்போதைக்கு ஓரளவு வரவேற்பு தொடர்கிறது.

இன்னும் சில நாட்களில் இரண்டு படங்களையும் பல தியேட்டர்களிலிருந்து எடுக்க வேண்டிய நிலை வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் தெரிவிக்கிறார்கள். அதன்பிறகே இரண்டு படங்களில் எந்த படத்திற்கு லாபம் அதிகம் கிடைத்தது என்ற தகவல்கள் வெளிவரும்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
நான்கு கதாநாயகிகள் நடிக்கும் கன்னித்தீவுநான்கு கதாநாயகிகள் நடிக்கும் ... சவுந்தர்யா ரஜினி  2வது திருமணம்: பிப்.,11ம் தேதி நடக்கிறது சவுந்தர்யா ரஜினி 2வது திருமணம்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

R Sundar - Coimbatore,இந்தியா
24 ஜன, 2019 - 09:57 Report Abuse
R Sundar பேட்ட படம் ஹிட்டு சொல்லறது அந்தப் படக் குழு மட்டும்தான்... ஏன்னா ஏ சென்டர்ல பேட்ட படம் சின்ன தியேட்டர்லதான் ரிலீஸ்... அந்த மாதிரி தியேட்டர்ல 90 சதவீதம் சீட் நிரம்பினா வசூல் போதாது... இப்ப கூட்டம் 40 பர்சென்டுக்கும் கீழ போயிடுச்சு... ஸோ, நிஜத்துல படம் படு தோல்வி...
Rate this:
anbu - tamilnadu,இந்தியா
23 ஜன, 2019 - 11:19 Report Abuse
anbu Irandu padankalin badget poruthavarai Viswasm movie thevai yaana vasul panniduchu ithu mega hituu..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in