'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |
சினிமாவின் தளங்கள் விரிவடைந்து கொண்டே இருக்கிறது. தற்போது அதன் புதிய தளம் வெப் சீரிஸ் மற்றும், ப்ரைம் வீடியோ. தியேட்டர்களில் வெளியிட முடியாத படங்கள் ப்ரைம் வீடியோக்களில் வெளியிடப்படுகிறது. சமீபத்தில் கதிர் நடித்த சிகை படம் அப்படித்தான் வெளியானது.
படங்களை யூ டியூப்பிலும் டவுண்ட் லோட் செய்து பார்க்கலாம். தற்போது யூ டியூப்பில் வெளியிடுவதற்கென்றே தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் ஒரு படம் தயராகிறது. இது குறித்து இதன் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் கூறியதாவது:
யு டியூப் இணையதளம் இன்று திரையுலகில் முக்கிய பங்காற்றி வருகிறது. படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் என ஒரு படத்தினை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் இதன் பங்கு அபாரமானது. இது வரை எத்தனையோ படங்களும் யூ டியூப் இணையதளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது. அப்படங்கள் ஒன்று திரையரங்கு சிக்கலினாலோ, தணிக்கை பிரச்சனையாலோ அவ்வாறு வெளியாகியுள்ளன.
ஆனால் இது வரை யு டியூப் வெளியீட்டிற்கென்று இந்தியாவில் படங்கள் தயாரிக்கப்பட்டதில்லை. இதற்கான கதை தெர்வு செய்யும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு தற்போது இறுதி செய்து விட்டோம். ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாக்கவிருக்கிறோம்.
இப்படம் யு டியூப்பில் வெளியானாலும் இதர டிஜிட்டல் தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடும் முயற்சியிலும் ஈடுபடவிருக்கிறோம். பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்கவிருக்கும் இத்திரைப்படம் உலக தரத்தில் இருக்க வேண்டும் என்பது எங்களுடைய பிரதான இலக்கு. இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரத்தை விரைவில் வெளியிடவிருக்கிறோம் என்றார்.