டி.ராஜேந்தரின் உடல்நலனை விசாரித்த முதல்வர் ஸ்டாலின் | ரஜினியை சந்தித்த கமல், லோகேஷ் | பிபியை எகிறச் செய்யும் சிவானியின் பேரழகு | குமரிப்பெண், முதல் நீ முடிவும் நீ, காஞ்சனா 2 - ஞாயிறு திரைப்படங்கள் | சீரியலில் என்ட்ரி கொடுக்கும் சாக்ஷி அகர்வால் | ஸ்ருதி சண்முகப்ரியாவின் பேச்சுலர் பார்ட்டி புகைப்படங்கள் வைரல் | சித்ரா மாதிரி ஆகிடுமோனு பயமா இருக்கு : நக்ஷத்திரா பற்றி பகீர் கிளப்பும் ஸ்ரீநிதி விஜய் | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ஷங்கர் பட நாயகி | மன்சூரலிகானிடம் ரூ. 50 லட்சம் மோசடி | சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் - அக்சய்குமார் லுக் வெளியானது |
பாண்டியராஜன் மகன் பிருத்விராஜ் நடிக்கும் படம் காதல் முன்னேற்ற கழகம். அவருக்கு ஜோடியாக சாந்தினி நடிக்கிறார். இவர்கள் தவிர சிங்கம்புலி, கஞ்சா கருப்பு, சிவசேனாதிபதி நடிக்கிறார்கள். பி.சி.சிவன் இசை அமைத்துள்ளார், ஹாரிஸ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் மாணிக் சத்யா கூறியதாவது:
இது 1985களில் நடக்கிற மாதிரியான கதை. காதலும், துரோகமும் கலந்த கதை. பிருத்விராஜ், கார்த்திக் ரசிகராக நடிக்கிறார். அவரைப்போன்று தலைமுடி வளர்த்து, பேசி, மேனரிசம் காட்டி நடித்துள்ளார். சாந்தினி டீச்சராக நடித்துள்ளார். சுப்பிரமணியபுரம் போன்று நட்பில் துரோகம் பற்றிய கதை. ஒரு உண்மை சம்பவத்தினை கதை கருவாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, ஊட்டி, கடலூர், திட்டக்குடி விருத்தாச்சலம் பகுதியில் படமாகி உள்ளது. இந்த பகுதி மக்களின் வாழ்வியலை சொல்லும் படமாகவும் இருக்கும். என்றார்.