Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் அறிக்கை, யார் யாருக்கான பதில்?

22 ஜன, 2019 - 12:52 IST
எழுத்தின் அளவு:
Ajith-statement-what-says.?

தமிழ்நாட்டில் புயல் அடித்தாலும், மழை பெய்தாலும், வெயில் அடித்தாலும், துப்பாக்கி சூட்டில் யாராவது இறந்தாலும், தமிழ்நாட்டில் எந்த ஒரு பிரச்சினை என்றாலும் அவற்றைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருப்பதுதான் அஜித்தின் வழக்கம்.

அரசியலில் இறங்காத நடிகர்கள் கூட மக்கள் பிரச்சினைகளுக்காகவும், மக்கள் மடிந்ததற்காகவும் ஆறுதலாக ஏதாவது ஒரு அறிக்கை விடுவார்கள். ஆனால், அப்படிப்பட்ட எந்த ஒரு சூழ்நிலையிலும் மக்களின் துயரங்களுக்கு ஆறுதல் சொல்லாத ஒரே நடிகர் அஜித் மட்டுமே. பலரும் அதைப் பற்றிப் பலமுறை பேசினாலும், எதையும் காதில் போட்டுக் கொள்ள மாட்டார் அஜித்.

ஆனால், அவருடைய ரசிகர்கள் சிலர் பாஜகவில் இணைந்ததாக செய்தி வெளியானதுமே, உடனே ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார். அரசியல் என்றதுமே அவர் ஆடிப் போனதன் காரணம் என்ன என்பது அவருக்கே வெளிச்சம்.

ஒரு மேடை நிகழ்வில் கருணாநிதியை எதிர்த்து கேள்வி கேட்டவர், அன்றிலிருந்து அதிமுக அனுதாபி என்ற பார்வையுடனேயே அஜித் பார்க்கப்பட்டு வருகிறார். அவருடைய நேற்றைய அறிக்கையில் தான் அதிமுக அனுதாபி அல்ல என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் சிலருக்கு அவருடைய பதில்களையும் அவருடைய அறிக்கையில் உள்ளடக்கி வைத்திருக்கிறார்.

அவருடைய அறிக்கையில் உள்ள, “என்னுடைய தொழில் சினிமாவில் நடிப்பது மட்டுமே” என்ற வரிகள் சினிமாவைத் தவிர தனக்கு வேறு எதிலும் ஈடுபாடு இல்லை. தன்னுடைய ரசிகர்களும் தன்னை ஒரு நடிகனாக மட்டுமே பார்க்கட்டும், வேறு எந்த கோணத்திலும் பார்க்க வேண்டாம். அவர்கள் தன் படங்களைப் பார்த்து ரசிக்கட்டும் என நடிகர் - பார்வையாளர் என்ற உறவுக்குள் மட்டுமே தன்னை நிலை நிறுத்திக் கொள்ளப் பார்க்கிறார்.

“நான் அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை. என் ரசிகர்களுக்கும் அதையேதான் நான் வலியுறுத்துகிறேன்,” என்ற வரிகள் 'விஸ்வாசம், பேட்ட' சண்டையில் ரஜனிக்கான பதிலாக பார்க்கப்படுகிறது.

“சமூக வலைத்தளங்களில் தரமற்ற முறையில் மற்ற நடிகர்களை, விமர்சகர்களை வசை பாடுவதை நான் என்றுமே ஆதரிப்பதில்லை. நம்மை உற்றுப் பார்க்கும் இந்த உலகம் இத்தகைய செயல்களை மன்னிப்பதில்லை,” என்ற வரிகள் அவருடைய ரசிகர்களின் சமூக வலைத்தள மோதலுக்கான பதில். இதற்குப் பிறகு சமூக வலைத்தள சண்டையை அஜித் நிறுத்துவார்களா என்பது பலமாக எழும் கேள்வி.

“அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு. அதை நான் யார் மீதும் திணிப்பது இல்லை. மற்றவர்கள் கருத்தை என் மேல் திணிக்க விட்டதும் இல்லை,” என்ற வரிகள், நான் அரசியலை உற்று நோக்குகிறேன், ஆனால், யாரும் என்னைக் கட்டுப்படுத்துவதை விரும்பவில்லை என்பதை உணர்த்துகிறார்.

அறிக்கையின் கடைசியில் 'வாழு, வாழ விடு', என அவர் முடித்திருப்பது, என்னை என் வழியில் வாழ விடுங்கள் என்ற அவரது எண்ணத்தை உணர்த்துகிறது.

அஜித்தின் அறிக்கையில் 'விஸ்வாசம்' பட வெளியீட்டின் போது, கட்அவுட் சரிந்து அவரது ரசிகர் ஒருவர் மரணம் அடைந்தது பற்றிய வருத்தமோ, படம் பார்க்க பணம் தராத அப்பாவைத் தீயிட்ட ரசிகர் பற்றிய எந்த ஒரு கண்டனமோ இல்லாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (19) கருத்தைப் பதிவு செய்ய
'விஜய்-63' - முதல்நாளே சண்டைக்காட்சி'விஜய்-63' - முதல்நாளே சண்டைக்காட்சி ரஜினியை சந்தித்த விஜய்யின் தாய் ரஜினியை சந்தித்த விஜய்யின் தாய்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (19)

Vijay - Bangalore,இந்தியா
23 ஜன, 2019 - 08:14 Report Abuse
Vijay அஜித் ரசிகர்கள் என்று சொல்லிக்கொண்டு , அட்டூழியம் செய்யும் ரசிகர்களுக்கு நல்ல அறிவுரை ... பாவம் அஜித் , அவரது ரசிகர்களால் பல இன்னல்களுக்கு ஆளாகி உள்ளார் .. போனதடவை இதே மாதிரி அஜித் ரசிகர்கள் திமுக வில் சேர்த்தார்கள் என்று செய்தி வந்ததும் துடிதுடித்து ரசிகர் மன்றங்களை கலைத்தார் , இந்த தடவை கலைக்க ஒன்றும் இல்லை ..
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
23 ஜன, 2019 - 08:11 Report Abuse
Vijay இங்க வந்து தளபதி 63 கதை சொல்லாதே . உங்க தல சொல்லுறத கேட்டு நல்ல பிள்ளையாக நடந்துக்கோ ...
Rate this:
venkat Iyer - nagai,இந்தியா
23 ஜன, 2019 - 06:00 Report Abuse
venkat Iyer ஐயா,ரஜினி போல சம்பாதிப்பதிலே குறியாக வைக்காமல்,கொஞ்சம் கொஞ்சமாக அரசிய லுக்கு வாருங்கள். குறைந்தபட்சம் ஒரு தொ குதியில் சுயேட்சையாக. நின்று வெற்றிபெற்று செல்வாக்கை காட்டுங்கள். இல்லாவிட்டால் நாளை உங்கள் படமும் அரசியல் ஆதாயத்தி ற்காக நிறைய தியேட்டர்கள் கொடுக்காமல் தமிழகத்தில் முடக்கப்படும் அபாயம் உள்ளது..ரஜினி போல இல்லாமல் மாற்றத்தினை கொண்டு வாருங்கள்.
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
22 ஜன, 2019 - 20:07 Report Abuse
Mirthika Sathiamoorthi வேற யாருக்கு நம்ம சுடலைக்கு தான்...தலைவரோட மாசை காலிபண்ணணும்ணு நெனைச்சு வசூல் விவரத்தை சன் சானலில் வெளியிடாம அஜித்துதான் மாசுன்னு எல்ல மீடியாவில் வீடியோ போடவச்சு அரசியல் பண்ணிட்டு இருந்தாரு...அவருக்கு பதிலடியா திருப்புர் மணியான பேட்டி போட்டு அப்பு கொடுத்தார் தலைவரு.வேற வழியில்லாம சன் ட்விட் போடவேண்டியதாயிடுச்சு ..இதுல தன பெயர் சம்பந்த இல்லாம வந்ததாள் அஜித்து கடுபாயி கொடுத்த அறிக்கை...
Rate this:
உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி - உண்மையூர் ,இந்தியா
22 ஜன, 2019 - 19:02 Report Abuse
உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி அன்பு நண்பர் அஜீத் அவர்களே... நீங்கள் கட்டாயம் அரசியலில் இறங்குவீர்கள்... ஏற்கனவே ஆட்சி நடத்தி வரும் கட்சியில் காலத்தின் கட்டாயத்தால் இணைந்து தலைவராகி தமிழக முதல்வராகும் காலம் நெருங்கிவிட்டது..... வரும் சட்டசபை தேர்தலுக்குள் இது நடக்கும்.... நடந்தே தீரும்.... இது சத்தியம்... வருங்கால தமிழக முதல்வர் அஜீத் வாழ்க.... ஜெய விஜயீபாவ உள்ளதா சொல்றேங்க.... மனசாட்சி.... உண்மையூர்... பாரதம்
Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Asuran
  • அசுரன்
  • நடிகர் : தனுஷ்
  • நடிகை : மஞ்சு வாரியர்
  • இயக்குனர் :வெற்றிமாறன்
  Tamil New Film Zombie
  • ஜாம்பி
  • நடிகர் : யோகி பாபு
  • நடிகை : யாஷிகா ஆனந்த்
  • இயக்குனர் :புவன் நல்லான்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in