Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அதிர்ச்சி தந்த பின்னணி பாடகி

22 ஜன, 2019 - 12:28 IST
எழுத்தின் அளவு:
Asha-Bhosle-shocks-everyone

தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் 'இளையராஜா-75' என்ற இசைநிகழ்ச்சி பிப்ரவரி 2, 3 தேதிகளில் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இளையராஜாவை கவுரவிக்கும்விதமாக மட்டுமின்றி, தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு நிதி திரட்டும் வகையிலும் பிரம்மாண்டமான முறையில் நடத்தப்பட இருக்கும் இந்த நிகழ்ச்சியில், தென்னிந்திய சினிமா கலைஞர்கள் மட்டும் இல்லாமல் வட இந்திய சினிமா கலைஞர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

அதற்காக விழா குழுவினர் வட இந்திய திரையுலகத்தை சேர்ந்த முக்கிய பிரபலங்களை நேரில் சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள். பிரபல பின்னணி பாடகி ஆஷா போன்ஸ்லேயை தன்னுடைய இசைநிகழ்ச்சியில் பாட வைக்கும் திட்டத்தில் அவரை அணுகும்படி கூறினாராம் இளையராஜா.

அதன்படி ஆஷாபோன்ஸ்லேயை சந்தித்து இளையராஜா 75 நிகழ்ச்சியில் அழைத்துள்ளனர். அந்நிகழ்ச்சியில் பாடுவதற்கு அவர் கேட்ட சம்பளத்தை கேட்டு வெறுத்துப்போய் திரும்பிவிட்டனர் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள்.

இதற்கிடையில் சங்கத்தின் தலைவர் விஷால், செயலாளர்கள் கதிரேசன், எஸ்.எஸ்.துரைராஜ், பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் விழா குழுவை சேர்ந்த நடிகர்கள் நந்தா, மனோபாலா ஆகியோர் அண்மையில் ரஜினி, கமல் ஆகியோரை சந்தித்து விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்துள்ளனர்.

ரஜினி, கமல் இருவரும் விழாவுக்கு வருவதாக உறுதி அளித்துள்ளனர். விஜய்யை இன்னும் அழைக்கவில்லை. விரைவில் அவரை சந்திக்க உள்ளனர். அஜித்திற்கும் அழைப்பு இருக்கும். ஆனால் அவர் பங்கேற்பாரா என்பது தெரியவில்லை.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
கல்யாண வீடாக மாறிய கமலா தியேட்டர்கல்யாண வீடாக மாறிய கமலா தியேட்டர் சிம்பு பட அறிவிப்பு : ஜி.வி.பிரகாஷ் அப்செட் சிம்பு பட அறிவிப்பு : ஜி.வி.பிரகாஷ் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Nallavan Nallavan - Kolkata,இந்தியா
23 ஜன, 2019 - 10:31 Report Abuse
Nallavan Nallavan இவரது அக்காக்காரி லதா மங்கேஷ்கரு பாடகர்களின் பாடலை விளம்பரத்துக்குப் பயன்படுத்த தனி ராயல்டி பாடகர்களுக்கு தரவேண்டும் என்று பணத்தாசையால் போராடியவர் .... பாடகர் முகம்மது ரபி என்ன சொன்னார் என்றால் பாடியதற்கு புரொட்யூசர் பணம் கொடுத்துவிட்டார் என்றால் பாடலே படக்குழுவின் உரிமையாகிவிடுகிறது, பாடகர்கள் அதற்குப் பின்னர் ராயல்டி கோருவது தார்மிக நியாயமில்லை என்று கூறினார் ..... இதனால் லதா மற்றும் ரபி இருவரிடையே மோதல் கூட ஏற்பட்டது .... பணத்தாசை பிடித்த குடும்பம் இந்த மராத்திக் குடும்பம் ....
Rate this:
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
22 ஜன, 2019 - 21:37 Report Abuse
A.George Alphonse "Kaasedhan Kadavulappa Antha Kadavulukkum Adhu Theriumappa" is proved by such incident.No one in the world sincerely serve for his or her professional or honour of others on free of cost.
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
22 ஜன, 2019 - 15:39 Report Abuse
Bhaskaran ஆஷா. செண்பகமே செண்பகமே பாடாலைபாடிவிட்டு அந்த பாட்டு தனக்கு ரொம்ப பிடித்திருந்தது படக்காட்சியும் தன்வாழ்வில் நடந்ததுபோல் இருந்ததால் அந்தப்பாடலுக்கு பேசிய பணத்தை வேண்டாமென்று சொல்லிவிட்டதாக அந்தக்காலத்தில் வந்த செய்தி உண்மையா பொய்யா தெரியாது
Rate this:
sahayadhas - chennai,இந்தியா
22 ஜன, 2019 - 13:32 Report Abuse
sahayadhas ஜம்பவ வித்துவான் MSV க்கு இல்லாத பொல்லாத விளம்பரம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Bigil
  • பிகில்
  • நடிகர் : விஜய்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :அட்லீ
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in