Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அரசியல் எனக்கு வேண்டாம் : அஜித் பளீச்

21 ஜன, 2019 - 20:17 IST
எழுத்தின் அளவு:
I-am-not-interested-in-Politics-says-Ajith

ரசிகர்கள் பணியில் கவனம் செலுத்துங்கள். சட்டம் ஒழுங்கை பேணுவதும், கல்வியில் கவனம் செலுத்துவதும் எனது ரசிகர்கள் எனக்கு செய்யும் அன்பு. அரசியலில் மற்றவர்கள் கருத்தை என் மீது திணிக்க விட்டதுமில்லை. எனது ரசிகர்களிடமும் நான் எதிர்பார்க்கிறேன்.எனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை எனவும். அரசியல் நிகழ்வுகளில் எனது பெயர் போட்டோ இடம் பெறக்கூடாது எனவும் ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் அறிவுறுத்தியுள்ளார் .

நடிகர் அஜித்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


சில அரசியல் நிகழ்வுகளுடன் எனது பெயரை சம்பந்தப்படுத்தி செய்திகள் வெளிவருகின்றன. எனக்கு நேரடியாகவோ, மறைமுகமாவோ அரசியல் ஈடுபாட்டில் ஆர்வம் கிடையாது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இது போன்ற செய்திகள் எனக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதாக மக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்திவிடும்.


அரசியலில் எனக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு. அதை நான் யார் மீதும் திணிக்க விரும்பவில்லை. வரிசையில் நின்று ஓட்டளிப்பதே எனது அதிகபட்ச அரசியல் தொடர்பு. எனது ரசிகர்கள் தங்களது தனிப்பட்ட அரசியலுக்கு எனது பெயரையோ,புகைப்படத்தையோ பயன்படுத்த வேண்டாம். எனது திரைப்படங்களில் அரசியல் சாயம் வரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு ஆதரவு தருமாறு ரசிகர்களை நான் நிர்பந்திக்கமாட்டேன்.


என்னுடைய தொழில் சினிமா மட்டுமே. அதனால் தான் நான் எனது இயக்கங்களை கலைத்தேன். நான்அரசியல் செய்யவோ, மற்றவர்களுடன் மோதவோ விரும்பவில்லை. ரசிகர்களும் சமூக வலைதளங்களில் மோதலில் ஈடுபட வேண்டாம்.


இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகர் அஜித் கூறியுள்ளார்.Advertisement
கருத்துகள் (10) கருத்தைப் பதிவு செய்ய
சொன்னதை செய்த இளையராஜாசொன்னதை செய்த இளையராஜா ஜித்தன் ரமேஷின் உங்கள போடனும் சார் ஜித்தன் ரமேஷின் உங்கள போடனும் சார்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (10)

indian -  ( Posted via: Dinamalar Android App )
22 ஜன, 2019 - 16:49 Report Abuse
indian jmk உங்க தலைவர் அரசியலுக்கு வரேன் சொல்லி 20வருடம் ஆச்சு ஆனால் அரசியலுக்கு வர தைரியம் இல்னல அவர்க்கு பயம் டொபசிட் கிடைக்காது பயமா ? இல்லா ஒரு ஒட்டு கூட கிடைக்காது என்ற பயமா.
Rate this:
serupalaiye adipen - ohio,யூ.எஸ்.ஏ
22 ஜன, 2019 - 16:43 Report Abuse
serupalaiye adipen அஜித் தவிர வேற எந்த நடிகரும் அரசியலில் ஜெயிக்க முடியாது... JMK... இது தான் உண்மை..
Rate this:
தமிழ்நாட்டு தல - coimbatore,இந்தியா
22 ஜன, 2019 - 12:46 Report Abuse
தமிழ்நாட்டு தல மிகவும் சரியாக, தெளிவாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார் அஜித். அரசியல் தனக்கு சரிப்பட்டு வராது என்று தெளிவாக புரிந்து வைத்துள்ளார். இதுபோல் நடிகர் ரஜினியும் சொல்லி விட்டால் நல்லது. சும்மா வருவேன், வருவேன் என்று ரசிகர்களை உசுப்பேற்றி பணம் சம்பாதிக்கிறார்.
Rate this:
JMK - Madurai,இந்தியா
22 ஜன, 2019 - 12:03 Report Abuse
JMK அரிசியல் இறங்குவது என்பது சாதாரண விஷயம் இல்ல ? அஜித்துக்கு தெரியும் அவருக்கு டெபாசிட் கிடைக்காது என்று அதனால அறிக்கை விடுகிறார் போல ? நாட்டுக்கு ரொம்ப முக்கியம்
Rate this:
22 ஜன, 2019 - 11:38 Report Abuse
Sridhar Sridhar தல என்றூம் தன் ரசிகனின் மனதில் நீங்க இடம் உண்டு... நீர் வாழும் மனித கடவூள் வாழு வாழ விடு...
Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Bigil
  • பிகில்
  • நடிகர் : விஜய்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :அட்லீ
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in