பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
உலக அளவிலான திரைப்பட விருதுகளில் கோல்டன் ரீல் விருதுகளும் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒலி எடிட்டிங்கில் சிறந்த சாதனை புரிந்தவர்களுக்காக அந்த விருதுகள் வழங்கப்படுகிறது. 66வது ஆண்டு கோல்டன் ரீல் விருதுகள் விழா வரும் பிப்ரவரி மாதம் 17ம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது.
மோஷன் பிக்சர் சவுண்ட் எடிட்டர்ஸ் அமைப்பால் நடத்தப்படும் இந்த விருதுக்காக ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த '2.0' படம் சிறந்த ஒலி வடிவமைப்பு - வெளிநாட்டுப் படத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 21ம் தேதி முதல் பிப்ரவரி 11ம் தேதி வரையில் வாக்குபதிவு நடைபெறுகிறது. பிப்ரவரி 17ம் தேதி விருதுகளுக்காக வெற்றி பெற்றவர்கள் விவரம் அறிவிக்கப்பட உள்ளது.
இந்த விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டது குறித்து '2.0' படத்திற்கு, ஒலி வடிவமைப்பு செய்துள்ள ரசூல் பூக்குட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ரசூல் பூக்குட்டி ஏற்கெனவே ஆஸ்கர் விருதுகள், பாப்டா விருதுகளை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
'2.0' படத்தில் இந்திய சினிமாவில் முதல் முறையாக '4டி எஸ்எல்ஆர்' ஒலி நுட்பத்தைப் பயன்படுத்தினார். அந்த ஒலி அமைப்பு ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது.