Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஸ்வாசம் வசூல் : இயக்குநர் சிவா என்ன சொல்கிறார்.?

19 ஜன, 2019 - 14:04 IST
எழுத்தின் அளவு:
Director-siva-about-Viswasam-collection

ஜனவரி 10-ந்தேதி ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் படங்கள் வெளியானதில் இருந்தே பரபரப்பு தொற்றிக்கொண்டது. இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் படங்களைப்பற்றி ஆகா, ஓஹோவென்று இணையதளங்களில் செய்திகளை பகிர்ந்து வந்தனர்.

இரண்டு படங்களின் வசூல் குறித்தும் ரஜினி, அஜித் ரசிகர்கள் செய்தி வெளியிட்டு மோதலில் ஈடுபட்டு வருகிறார்கள். அப்படங்கள் வெளியாகி 9 நாட்களில் பேட்ட 100 கோடியும், விஸ்வாசம் 125 கோடியும் வசூலித்திருப்பதாக செய்திகள் பரப்பப்பட்டு வருகிறது. அதேசமயம் இது பொய்யான தகவல்கள் என்கிற இன்னொரு செய்தியும் வெளியாகிக்கொண்டிருக்கிறது.

இதுகுறித்து விஸ்வாசம் பட டைரக்டர் சிவா அளித்துள்ள ஒரு பேட்டியில், நான் ஒரு டெக்னீசியன். வியாபாரத்திற்குள் போய் விட்டால் என்னுடைய கிரியேட்டிவிட்டி போய் விடும். அதனால் ஒரு கதையை படமாக்க கடினமாக உழைப்பேன். அந்த படம் வெளியானதும் அடுத்த கதையில் கவனத்தை திருப்பி விடுவேன்.

அதேபோல் ரசிகர்கள் வியாபாரத்திற்குள் போகும்போது அவர்களின் ரசனையும் போய் விடும். அதனால் அவர்கள் படம் பார்த்து கொண்டாடுவதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். வியாபாரத்தைப்பற்றி தயாரிப்பாளர்களும், விநியோகஸ்தர்களும்தான் யோசிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஆக, படத்தின் வசூல் குறித்து சொல்ல விரும்பாத டைரக்டர் சிவா, தனது நிலைபாட்டை மட்டும் சொல்லி இந்த வசூல் சர்ச்சையில் இருந்து விடுபட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
இறந்த ரசிகரின் தாயாரின் மாதச்செலவை ஏற்ற சந்தீப் கிஷன்இறந்த ரசிகரின் தாயாரின் மாதச்செலவை ... பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': சலசலக்குது 'சார காத்து'... பாடலை திருடினாரா 'கவிப்பேரரசு': ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

R Sundar - Coimbatore,இந்தியா
20 ஜன, 2019 - 10:57 Report Abuse
R Sundar 2.o படம் கோவையில் எட்டு பெரிய தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது... இப்ப ‘பேட்ட’ படம் எட்டு குட்டி தியேட்டர்களில்தான் ரிலீஸ் ஆகியிருக்கு... அதுவும் காத்து வாங்குது... 2.o பாலக்காட்டில நாலு தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது... இப்ப ‘பேட்ட’ அங்க ஒரே ஒரு குட்டி தியேட்டர்லதான் ரிலீஸ்... ஸோ, 2.o வசூல் ரீதியா flop ஆனது ‘பேட்ட’யை வெகுவா பாதிச்சிருக்கு... இதுல இருந்தே தெரியலையா... ரஜினியோட பிசினஸ் வால்யூ கீழ போய் ரொம்ப நாளாச்சுன்னு?
Rate this:
JMK - Madurai,இந்தியா
21 ஜன, 2019 - 16:24Report Abuse
JMKகோவையில் விசுவாசம் படுதோவி மதுரையில விசுவாசம் சுமார் கேரளாவுல சுத்தமா வூத்திக்கிச்சு சென்னையில மரண அடி அஜித்துக்கு இது தேவையா ?...
Rate this:
arul -  ( Posted via: Dinamalar Android App )
19 ஜன, 2019 - 16:19 Report Abuse
arul Pongaluku veliya padathil Viswasan sirandha padam. petta vida adiga vasool um adigam. sun network seiyum arasiyaluku idhu sariyana adi.
Rate this:
JMK - Madurai,இந்தியா
19 ஜன, 2019 - 15:57 Report Abuse
JMK குற்றமுள்ள நெஞ்சு குருகுர்க்கும் காசு கொடுத்து விளம்பரம் பண்ணும் விசுவாசம் 125 கோடி என்கிற பொய்யான செய்தி அவர் மனசை வுறுத்தியிருக்கும் ? அதான் இப்படி சௌள்ளுகிறாரோ ? உண்மைல விசுவாசம் நுறு கோடி தாண்டவில்லை என்பதே உண்மை ?
Rate this:
19 ஜன, 2019 - 18:21Report Abuse
Sridhar Sridharஅப்ப எவ்வளவு வசூல் னு நீங்க செல்லுங்க...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in