Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விசுவாசமான விஸ்வாசம் : போலீஸ் பாராட்டு

17 ஜன, 2019 - 18:21 IST
எழுத்தின் அளவு:
Police-deputy-commissioner-congrats-Viswasam-film

அஜித் - சிவா கூட்டணியில் நான்காவது முறையாக வெளியாகி உள்ள விஸ்வாசம் படம், பொங்கல் கொண்டாட்டமாக ஜன.,10ம் தேதி வெளியானது. மக்களின் அமோக ஆதரவுடன் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்தை பலரும் பாராட்டி வரும் வேளையில், சென்னை போலீஸ், துணை கமிஷனர் சரவணனும் பாராட்டியிருக்கிறார்.

இதுதொடர்பாக பேஸ்புக்கில் அவர் பதிவிட்டிருப்பதாவது : சமீபத்தில் வெளியான அஜித் நடித்த விஸ்வாசம் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. கதை, பாடல், நடிப்பு, சண்டைக்காட்சிகள் என ஒவ்வொருவருக்கும் ஏதோ ஒன்று பிடித்திருந்தாலும் எனக்கும் சில காட்சிகள் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

01. படத்தில் கதாநாயகன், கதாநாயகி இருவரும் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கட்டாயமாக ஹெல்மெட் அணிந்து செல்வது.

02. கதாநாயகன் கார் ஓட்டும் போதெல்லாம் சீட் பெலட் அணிவது. தனது மகளின் உயிரை காப்பாற்ற செல்லும் அவசரத்தில் கூட சீட் பெல்ட் அணிந்து செல்வது,

03. பெற்றோர்கள் தங்கள் கனவுகளை குழந்தைகள் மேல் திணிக்காமல், அவர்கள் கனவுகளை எட்ட துணை நிற்க வேண்டுவது.

இந்தியாவில் சாலை விபத்துகளில் அதிகம் பேர் உயிரிழக்கும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. பல லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட அஜித் போன்ற நடிகர்கள் போக்குவரத்து விதிகளை பின்பற்றி நடிக்கும்போது, அவரது ரசிகர்களும் பின்பற்ற வேண்டும் என்பதே எனது ஆசை.

விஸ்வாசம் படத்தின் கதாநாயகன் அஜித் மற்றும் இயக்குநர் சிவா மற்றும் அவரது குழுவினருக்கு பாராட்டுகள்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (11) கருத்தைப் பதிவு செய்ய
வெளியீட்டுக்கு முன்பே லாபத்தைக் கொடுத்த தேவ்வெளியீட்டுக்கு முன்பே லாபத்தைக் ... விஜய் ஆண்டனி படத்திற்கு இசையமைக்கும் இளையராஜா விஜய் ஆண்டனி படத்திற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (11)

serupalaiye adipen - ohio,யூ.எஸ்.ஏ
19 ஜன, 2019 - 16:12 Report Abuse
serupalaiye adipen விஜய் 63 கதை சுருக்கம் நன்று... விஜய் அவனை நம்பி இல்லை.... Director, Music Director, Comedians, இவங்கள நம்பி இருக்கான்.
Rate this:
rajkumar - periyakulam,இந்தியா
18 ஜன, 2019 - 10:26 Report Abuse
rajkumar ஒரு படத்துல யோக்கியனா நடிச்சுட்டு அடுத்த படத்துல தண்ணி தம்முனு நடிக்க போறாப்ல இதுக்கு பாராட்டாமாம்
Rate this:
Technicalsymposium.com - Chennai,இந்தியா
18 ஜன, 2019 - 07:02 Report Abuse
Technicalsymposium.com All cine actors should teach & Follow the rules and regulation ,to a better nation
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18 ஜன, 2019 - 03:56 Report Abuse
J.V. Iyer தலன்னா தலைதான்.
Rate this:
Radj, Delhi - New Delhi,இந்தியா
17 ஜன, 2019 - 20:32 Report Abuse
Radj, Delhi இந்த படத்தை டெல்லி யில் பார்க்கும் பொழுது நானும் கவனித்தேன், படத்தில் அஜித் அவர்கள் லோக்கல் ரௌடியாக இருந்தாலும் சட்டத்தை மதித்து ஹெல்மெட், கார் ஓட்டும் பொழுது seat பெல்ட் மற்றும் குழந்தைகளிடம் கருத்தை திணிக்கக்கூடாது போன்ற செயல் பாராட்டவேண்டியது. திரு சரவணன் அவர்களின் (துணை கமிஷனர், காவல் துறை, சென்னை) கருத்து வரவேற்கத்தக்கது. இவரை போன்ற காவல்துறை அதிர்க்காரிகள் இது போன்ற கருத்தை சொல்வதால் மக்களும் தன் தவறை உணர்வார்கள். ஜெய் ஹிந்த்
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Pizhai
  • பிழை
  • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in