விஜய்யுடன் நடிக்கும் குழந்தை நட்சத்திரங்கள்! | 'அடடே சுந்தரா' டிரைலர் மே 30ல் வெளியீடு | ஆக் ஷனில் அசத்தும் அக்னிச் சிறகுககள் டீசர் | வீர சாவர்க்கரை அப்படியே பிரதிபலிக்கும் ரன்தீப் | குறும்படத்தில் நடித்த எஸ்.ஏ.சந்திரசேகர் | பாடி பில்டரை மணந்தார் ஸ்ருதி | வருமானவரி வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய எஸ்.ஜே.சூர்யாவின் மனு தள்ளுபடி | என்டிஆர் நூற்றாண்டு விழா தொடங்கியது: ஜூனியர் என்டிஆர் அஞ்சலி | 2021 கேரள அரசு விருதுகள் அறிவிப்பு : சிறந்த நடிகர் பிஜூமேனன், சிறந்த நடிகை ரேவதி | புதுச்சேரியில் சிவகார்த்திகேயன் பட பாடல் படப்பிடிப்பு |
நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷ் - யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் வெளியான படம் மாரி 2. இந்தப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் வரவேற்பு பெற்றன. குறிப்பாக ரவுடி பேபி பாடலின் வீடியோ ஒரு வாரத்திற்குள்ளாகவே 4 கோடி பார்வைகளை கடந்து புதிய சாதனை படைத்தது.
இந்நிலையில், உலகளாவிய இசை பற்றிய செய்திகளுக்கு பிரசித்தி பெற்ற பில்போர்டு, ஒவ்வொரு வாரமும் சர்வதேச அளவில் பாப் ஆல்பங்கள், படங்களின் பாடல்களை தரவரிசைப்படுத்துகிறது. இதில் ஆன்லைன், ரேடியோ, யு-டியூப் என பல தளங்களில் இருந்து இந்தப்பட்டியலை வெளியிடுகிறது.
அந்தவகையில் பில்போர்டு, இந்தவாரம் டாப் 25 பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் 4வது இடத்தை பெற்றுள்ளது. இதற்கு முன்னர் தனுஷ் - அனிரூத் கூட்டணியில் வெளியான, ஒய் திஸ் கொலவெறி பாடலின் மேக்கிங் வீடியோ இந்த பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
தற்போது, மீண்டும் தனுஷின் பாடல் இடம் பெற்றுள்ளது. அதிலும் இம்முறை முதன்முறையாக தமிழ் பாடலின் வீடியோ வடிவம், பில்போர்டின் டாப் 25 பட்டியலில் இடம் பெற்று உள்ளது. இப்பாடலை 8.5 கோடிக்கும் அதிகமானபேர் பார்த்துள்ளனர்.
இந்தப்பட்டியலில் 5வது இடத்தில் சமீபத்தில் வெளியான ஹிந்தி படமான சிம்பாவில் இடம் பெற்ற ஆங்க் மாரே பாடலும் இடம் பிடித்திருக்கிறது. கடந்த டிச.,5ம் தேதி வெளியிடப்பட்ட இப்பாடலை தற்போது வரை 29 கோடி பேர் பார்த்துள்ளனர்.