Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஜன.,25ம் தேதி வெளிவருகிறது, சார்லி சாப்ளின் 2

17 ஜன, 2019 - 12:16 IST
எழுத்தின் அளவு:
Charlie-chaplin-2-releasing-on-Jan-25

16 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் சார்லி சாப்ளின். ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, பிரபு நடித்த இந்தப் படம் வெற்றி பெற்றது. பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது அதே பிரபுதேவாவும், பிரபுவும் நடிக்க அதன் இரண்டாம் பாகம் உருவாகி இருக்கிறது.

பிரபுதேவாவுடன் நிக்கி கல்ராணி, அடா சர்மா, அரவிந்த் ஆகாஷ், உள்பட பலர் நடிக்கிறார்கள். சவுந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார், அம்ரீஷ் இசை அமைக்கிறார். நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த இந்தப் படம் தற்போது வெளிவரத் தயாராகி விட்டது. வருகிற 25ந் தேதி வெளிவருகிறது. இதுகுறித்து இயக்குனர் ஷக்தி சிதம்பரம் கூறியதாவது:

என் படங்களில் காமெடியும் கமர்ஷியலும் கூடுதலாக இருக்கும். சார்லி சாப்ளின் முதல் பாகத்தில் இதெல்லாம் இருந்ததால் தான் படம் எல்லா மொழிகளிலும் அமோக வெற்றி பெற்றது. 16 வருடங்களுக்கு பிறகு அதே டைட்டிலில் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. பிரபு தேவா மேட்ரிமோனியல் நிறுவனம் நடத்தும் வேடத்தில் நடிக்கிறார். நிக்கி கல்ராணி சமூக ஆர்வலராக நடிக்கிறார். பிரபு டாக்டராகவும் அடா சர்மா மனோதத்துவ நிபுனராகவும் நடிக்கிறார்கள்.

படத்தில் கிராமப்புற பாடகர்கள் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி பாடிய சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடல் யூ டியூப்பில் 7.5 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. லட்சக் கணக்கில் டப் மேஷ் உருவாக்கப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. படப்பிடிப்பு கோவா, கும்பகோணம், சென்னை போன்ற இடங்களில் நடை பெற்றுள்ளது. இம்மாதம் 25 ம் தேதி படம் வெளியாகிறது. என்றார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
புதிய அறிமுகங்கள் : குட்டி ரேவதி இயக்குனர், ஹீரோ ஹரிபுதிய அறிமுகங்கள் : குட்டி ரேவதி ... ரவுடி பேபிக்கு மற்றுமொரு மகுடம் : பில்போர்டில் இடம் பெற்றது ரவுடி பேபிக்கு மற்றுமொரு மகுடம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Lockup
    • லாக்அப்
    • நடிகர் : வைபவ்
    • நடிகை : வாணி போஜன்
    • இயக்குனர் :சார்லஸ்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in