Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிறந்தநாள் : மக்கள் திலகம் எம்ஜிஆர்., பற்றிய சுவாரஸ்யங்கள்

17 ஜன, 2019 - 12:03 IST
எழுத்தின் அளவு:
Makkal-Thilagam-MGR

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் இதை உண்மைப்படுத்தியவர்கள் உண்டா என சிந்தனையை ஓட விட்டபோது கிடைத்த பெயர் தான் மருதுார் கோபாலன் மேனன் ராமச்சந்திரன். ஆனால் மக்கள் உச்சரித்தது எம்.ஜி.ஆர்., இலங்கை கண்டியில் 1917ம் ஆண்டு ஜன.,17ல் பிறந்தார். 1977 - 87 வரை தமிழகத்தின் முதல்வராக இருந்து மறைந்தார். அவரின் பிறந்தநாளான இன்று அவரைப்பற்றிய சுவாரஸ்யங்கள்...

எம்.ஜி.ஆர் நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி(1936). கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977). 'கர்ணன்' படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத் தான் கேட்டார்கள். 'புராணப் படம் பண்ண வேண்டாம்' என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர் !

எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்த 'மலைக்கள்ளன்'. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது. நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் எம்.ஜி.ஆர் இயக்கிய படங்கள்

எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின் 'அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடா' பாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும். சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். மது அருந்தும் காட்சிகளையும் தவிர்த்தார். பெரும்பாலான படங்களில் கதாநயாகிகள் தான் எம்.ஜி.ஆரை காதலிப்பார்கள்.

முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷூட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டு 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படத்தை முடித்துக் கொடுத்தார் . 'பொன்னியின் செல்வன்' கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், அவரது அந்த ஆசை நிறைவேறவில்லை.

எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்க வைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், எம்.ஜி.ஆரை அதிகம் விமர்சித்த துரைமுருகன். இப்போதும் சினிமாவில் வலம் வரும் கோவை சரளா.

அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்து 'நான் எம்.ஜி.ராமச்சந்திரன், சினிமா நடிகர்' என்று அறிமுகம் செய்துகொள்வார். ரொம்பவும் நெருக்கமானவர்களை 'ஆண்டவனே ' என்றும், தயாரிப்பாளர்களை முதலாளி என்றும் அழைப்பார். நெருக்கமான மலையாள நண்பர்களிடம் சரளமாக மலையாளம் பேசுவார்.

அடிமைப் பெண் பட ஷூட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்., குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப் போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார்.

பெற்றவர்களைத் தவிர மற்றவர் காலில் விழக்கூடாது என்பார். ஆனால் எம்.ஜி.ஆரே காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர் தான் எம்.ஜி.ஆரூக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரை தனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார்.

அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார். அன்னையை வணங்கிவிட்டுத்தான் வீட்டை விட்டு வெளியில் செல்வார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
பிப்., தாங்குமா? : ரிலீசுக்கு காத்திருக்கும் 18 படங்கள்பிப்., தாங்குமா? : ரிலீசுக்கு ... புதிய அறிமுகங்கள் : குட்டி ரேவதி இயக்குனர், ஹீரோ ஹரி புதிய அறிமுகங்கள் : குட்டி ரேவதி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

R S BALA - Chennai,இந்தியா
17 ஜன, 2019 - 15:19 Report Abuse
R S BALA எம் ஜீ ஆர் அவர்கள் வாழ்ந்த காலத்து சிறுவன் நான் ... இன்று அவரது திரை பாடல் பல இடங்களில் ஒலித்துக்கொண்டிருந்தது ... அதில்தான் என்ன ஒரு இனிமை மற்றும் ஈர்க்கும் கருத்துக்கள் .. அப்போதைய ரசிகர்கள் அதில் மயங்கியதின் காரணம் புரிகிறது .. இப்போது அதுபோன்று பாடல்கள் இல்லாதது காலக்கொடுமையே ...
Rate this:
17 ஜன, 2019 - 12:32 Report Abuse
ருத்ரா இன்றும் என்றும் மக்கள் இதயத்துடன் இணைந்த ஒரே நடிகராக அடுத்தவர் நினைக்கும் போதே உதவும் உள்ளம் கொண்டவராக பசியின்றி குழந்தைகள் படிக்க வேண்டும் என்பவராக ஒவ்வொரு பாடலும் நல்ல கருத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று கவனம் செலுத்தியவராக திகழ்ந்த இதயக்கனிக்கு அன்பும மரியாதை கலந்த வணக்கம். மனதில் வாழும் மாபெரும் சரித்திரம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Bigil
  • பிகில்
  • நடிகர் : விஜய்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :அட்லீ
  Tamil New Film Kaithi
  • கைதி
  • நடிகர் : கார்த்தி
  • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
  Tamil New Film Action
  • ஆக்ஷன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : தமன்னா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in