பாகிஸ்தான் பாடகரை நீக்கிய சல்மான்கான் | மகிழ்ச்சியில் ஒரு அடார் லவ் நூரின் ஷெரீப் | தனுஷ் - த்ரிஷாவுக்கு ஆசியா விஷன் 2019 விருது | முடங்கி கிடந்த படத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்த மம்முட்டி | ஆதித்யா வர்மா ஆன அர்ஜூன் ரெட்டி ரீ-மேக் | சிவகார்த்திகேயன் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் | ஹிந்தி பாடலை போட்டு பாடலின் காட்சியை படமாக்கிய சீனுராமசாமி | மே மாதம் சிவகார்த்திகேயனின் இரண்டு படங்கள் ரிலீஸ் | சூப்பர் ஹீரோவாகிறார் ஜெய் | 43 ஆண்டுகளுக்குப்பிறகு பரத நாட்டியமாடிய சுஹாசினி |
இம்மாதம் பொங்கல் விழாவையொட்டி வரிசையாக படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஜினி நடிப்பில் பேட்ட மற்றும் அஜித் நடிப்பில் விஸ்வாசம் ஆகிய இரு பெரும் படங்கள் ரிலீசானதால், வெளியாகக் காத்திருந்த மற்ற படங்கள் எல்லாம் அடுத்த மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் ரிலீசுக்கு காத்திருக்கும் படங்கள் மொத்தம் பதினெட்டு என கூறப்படுகிறது. 'தேவ்', 'வந்தா ராஜாவாத்தான் வருவேன்', 'சர்வம் தாள மயம்', 'பேரன்பு', 'கண்ணே கலைமானே', 'களவாணி 2', 'பூமராங்', 'வர்மா', '100% காதல்', 'கழுகு 2', 'ஐங்கரன்', 'பஞ்சாட்சரம்', 'திருமணம்', 'தாதா 87', 'வாண்டு', 'அக்னி vs தேவி', 'சகா', 'பொதுநலன் கருதி' உள்ளிட்ட 18 படங்களும் ரிலீசுக்காக வரிசை கட்டி நிற்கின்றன.
இதில் ஒரு சில படங்கள் மட்டும் பிப்., 14 காதலர் தினத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. பிப்., மாதத்தில் 28 நாட்களே இருப்பதால், இத்தனை படங்கள் ரிலீசானால், பார்ப்பவர்கள் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.