Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கடாரம் கொண்டான் படத்தில் விக்ரமுக்கு ஜோடியில்லை

16 ஜன, 2019 - 13:58 IST
எழுத்தின் அளவு:
Kadaram-Kondan-:-No-heroine-to-Vikram

சாமி 2 படத்திற்கு பிறகு விக்ரம், கடாரம் கொண்டான் படத்தில் நடித்து வருகிறார். விக்ரம் நடிக்கும் 56வது படமாக உருவாகி வரும் இந்தப் படத்தில் கமல்ஹாசனின் மகள் அக்ஷராஹாசன் விக்ரமுக்கு ஜோடியாக நடிப்பதாக சொல்லப்பட்டது.

விக்ரம் வயதுக்கு அக்ஷரா ஹாசன் ஜோடியாக நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களே என்ற கருத்து நிலவிய நிலையில் சமீபத்தில் வெளியான கடாரம் கொண்டான் படத்தின் டீசர் அதற்கு விடையாக அமைந்துள்ளது.

அந்த டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகளின்படி விக்ரம் சற்று வயதானவராக நடிக்கிறார். படத்தில் அவருக்கு ஜோடியில்லை என்று சொல்லப்படுகிறது. அக்ஷராவுக்கு ஜோடியாக வேறு ஒருவர் நடித்திருக்கிறார்.

தூங்காவனம் படத்தின் இயக்குநர் ராஜேஷ் செல்வா இந்தப் படத்தை இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு சீனிவாஸ் குப்தா ஒளிப்பதிவு செய்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் இந்தப்படத்தை ஏப்ரலில் திரைக்கு கொண்டு வர உள்ளனர்.

தஞ்சை பெரிய கோயிலை கட்டிய ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழன் கடல் கடந்து பல நாடுகளை வென்றதால் அவருக்கு கடாரம் கொண்டான் என்ற பட்டம் கிடைத்தது. இந்தப்படத்துக்கும் வரலாற்று சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை, டோன்ட் பிரீத் என்ற ஆங்கிலப்படத்தில் தழுவலே இந்தப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
விஜய் 63 படப்பிடிப்பு ஜனவரி 21ம் தேதி தொடக்கம்விஜய் 63 படப்பிடிப்பு ஜனவரி 21ம் தேதி ... தேவ் விநியோக உரிமையை வாங்கிய பிரபல தயாரிப்பாளர் தேவ் விநியோக உரிமையை வாங்கிய பிரபல ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

vira - tamil naadu,இந்தியா
16 ஜன, 2019 - 19:33 Report Abuse
vira அப்பா கமல் கூட நடிக்க சொல்லுங்க லிப் லாக் கிச் கொடுப்பாரு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Bigil
    • பிகில்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :அட்லீ
    Tamil New Film Kaithi
    • கைதி
    • நடிகர் : கார்த்தி
    • இயக்குனர் :லோகேஷ் கனகராஜ்
    Tamil New Film Action
    • ஆக்ஷன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in