தீவிர உடற்பயிற்சியில் இறங்கிய சமந்தா | பிரபாஸின் சலார் படத்தில் யஷ் | தோனி தயாரிக்கும் முதல் தமிழ்ப்படம் 'எல்.ஜி.எம்' : சென்னையில் ஆரம்பம் | நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் : ஏ.ஆர்.ரஹ்மான் விருப்பம் | சிவகார்த்திகேயனின் மாவீரன் பட கதை மாற்றமா? - தயாரிப்பு தரப்பு விளக்கம் | விஜய் சேதுபதி தந்த பர்த்டே சர்ப்ரைஸ் : வாயடைத்து போன பவித்ரா ஜனனி | பாக்கியலெட்சுமி சீரியலில் ராதிகாவாக வனிதாவா? | அசீமின் வெற்றி சமூகத்துக்கு ஆபத்து - பிக்பாஸ் விக்ரமன் பளார் பேட்டி | போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அபிநயா | தமிழ் நடிகர்களுக்கு மரியாதையுடன் அதிக சம்பளம் : சம்பத்ராம் |
88 வயதான சாருஹாசன் ஹீரோவாக நடிக்கும் படம் தாதா 87. இதில் அவர் ஜோடியாக கீர்த்தி சுரேசின் பாட்டி சரோஜா நடிக்கிறார். இவர்கள் தவிர ஜனகராஜ், ஸ்ரீபல்லவி உள்பட பலர் நடிக்கிறார்கள். ராஜ பாண்டி ஒளிப்பதிவு செய்கிறார். லேண்டர் லீ மார்ட்டி இசை அமைக்கிறார். கலை சினிமா சார்பில் கலைச்செல்வன் தயாரிக்கிறார். தமிழ், மற்றும் ஹிந்தியில் வெளிவருகிறது.
இந்தப்படத்தின் அனைத்து பணிகளும் முடிந்து விட்டது. அடுத்த மாதம் வெளிவருகிறது. படத்தின் புரோமோசன் பணிகளில் ஒரு பகுதியாக வீட்டுக்கு வீடு மஞ்சப்பை கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். தற்போது பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் மஞ்சப் பைக்கு மவுசு கூடியிருக்கிறது. அதனால் மாட்டம்தோறும் ஆட்களை நியமித்து வீட்டுக்குவீடு மஞ்சப்பை கொடுக்க இருக்கிறார்கள்.