Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆட்டம் காணுகிறதா ரஜினிகாந்த் ஏரியா ?

14 ஜன, 2019 - 15:57 IST
எழுத்தின் அளவு:
Did-Rajinis-box-office-is-shaked-in-TN

தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் வியாபாரம், வசூல் எந்த உச்சத்துக்குப் போகும் என்பதை நிரூபித்த முதல் நடிகர் ரஜினிகாந்த். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள், வெளிநாடுகள் என முதன் முதலில் தமிழ்ப் படங்களுக்கான வியாபார எல்லையை விரிவாக்கியவரும் ரஜினிகாந்த்தான்.

ஆனால், கடந்த சில படங்களாக அவருடைய படங்களின் தமிழ்நாடு வசூல் கொஞ்சம் தடுமாறி வருகிறது என்பதுதான் உண்மை. சிவாஜி, எந்திரன் ஆகிய இரண்டு படங்கள்தான் புதிய வசூல் சாதனையை ஏற்படுத்தின. அவற்றிற்கு முன்னும், பின்னும் வந்த படங்கள் மற்ற நடிகர்களின் படங்களால் முறியடிக்கப்பட்டன.

குறிப்பாக விஜய், படத்திற்குப் படம் ரஜினியை விட சிலபல மடங்கு வேகமாக முன்னேறிக் கொண்டு செல்கிறார். துப்பாக்கி, கத்தி, தெறி, மெர்சல், சர்கார் ஆகிய ஐந்து படங்களின் வசூல் விஜய்யை இப்போது தமிழ்நாட்டின் புதிய உச்ச நட்சத்திரமாக மாற்றியுள்ளது. அது போன்று தொடர்ச்சியாக ஐந்து வசூல் படங்களை ரஜினியால் கொடுக்க முடியவில்லை என்பதை அவரது ரசிகர்களும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

காலா, கபாலி, 2.0, பேட்ட ஆகிய படங்களின் வசூல் விஜய் பட வசூலுடன் ஒப்பிடும் போது குறைவுதான். பேட்ட படத்தின் தமிழ்நாடு வசூல் தற்போது விஸ்வாசம் படத்தை விட குறைவாக இருப்பதும் ஆச்சரியமளிக்கிறது என்கிறார்கள். ரஜினியை முந்திவிட்டதாக மகிழ்ச்சியடைந்த விஜய் ரசிகர்களுடன், இப்போது அஜித் ரசிகர்களும் பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்.

ஆனாலும், உலக அளவில் அவர்களால் ரஜினி வசூலை இன்னும் நெருங்க முடியவில்லை. ரஜினியைப் போன்று 40 வருடங்கள் அவர்கள் இருவராலும் சாதனை புரிய முடியுமா என்பது சந்தேகம்தான் என்கிறார் மூத்த வினியோகஸ்தர் ஒருவர்.

எப்படியோ, ரஜினிகாந்த்தின் இடத்தை அசைத்துப் பார்க்கும் வேலையை விஜய்யும், அஜித்தும் ஆரம்பித்துவிட்டார்கள்.

Advertisement
கருத்துகள் (53) கருத்தைப் பதிவு செய்ய
பைக்கில் சுற்றும் சினிமா பிரபலங்கள்!பைக்கில் சுற்றும் சினிமா பிரபலங்கள்! ஒரே படத்தில் மாவதன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி ஒரே படத்தில் மாவதன், அனுஷ்கா, அஞ்சலி, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (53)

Senthil - Chennai,இந்தியா
20 ஜன, 2019 - 17:53 Report Abuse
Senthil More than 30 years Rajini seen such a criticising. Indirectly it's encouraging him.
Rate this:
serupalaiye adipen - ohio,யூ.எஸ்.ஏ
19 ஜன, 2019 - 17:01 Report Abuse
serupalaiye adipen Ajith is not to be compared with Rajini or Vijay.. He is already ahead of these two...
Rate this:
serupalaiye adipen - ohio,யூ.எஸ்.ஏ
19 ஜன, 2019 - 16:57 Report Abuse
serupalaiye adipen கோவைல பல theatrekala பேட்ட எடுத்துட்டு .. விசுவாசம் போட்டுருக்காங்க..
Rate this:
tamilselvan - chennai,இந்தியா
18 ஜன, 2019 - 16:52 Report Abuse
tamilselvan மூத்த வினியோகஸ்தர் ஜால்ரா நல்ல அடிக்கீர்கள் தமிழ்நாடு திரைப்பட இருப்பவர் மொத்த போறும் நல்ல ஜாலர் அடிக்கீர்கள்
Rate this:
aruna devi - Mumbai,இந்தியா
16 ஜன, 2019 - 16:10 Report Abuse
aruna devi Big joke of this year. Rajini Sir already crossed 150 movies. They are just in 60s . Just imagine, to cross 100 movies, how much time, these two will take. Rajini will be there in our hearts for ever.
Rate this:
மேலும் 48 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Andha Nimidam
  • அந்த நிமிடம்
  • நடிகர் : புதுமுகம்
  • நடிகை : புதுமுகம்
  • இயக்குனர் :குழந்த ஏசு
  Tamil New Film Party
  • பார்ட்டி
  • நடிகர் : ஜெய் ,
  • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :வெங்கட் பிரபு
  Tamil New Film En Kadhali Scene Podura
  Tamil New Film Pettikadai
  • பெட்டிக்கடை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in