Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விக்ரம் ரசிகர்களுக்கு டீசர் விருந்து: ராஜேஷ் எம். செல்வா

14 ஜன, 2019 - 14:03 IST
எழுத்தின் அளவு:
Treat-to-Vikram-fans-says-Director-Rajesh-M-Selva

நடிகர் கமல் தயாரிப்பிலும், நடிகர் விக்ரம் நடிப்பிலும் உருவாகும் புதிய படம் 'கடாரம் கொண்டான்'. இந்தப் படத்தில் நடிகர் கமலின் மகள் அக்ஷரா ஹாசனும் நடிக்கிறார். படத்தின் படபிடிப்பு முழுமையாக முடிந்து விட்ட நிலையில், அடுத்த கட்ட வேலைகளில் படக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்தப் படத்தின் டீசர், பொங்கல் நாளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

வரும் 15ல் வெளியாக இருக்கும் இந்த படத்தின் டீசரை, படத்தின் இயக்குநர் ராஜேஷ் எம்.செல்வா, கூடவே இருந்து தயாரித்து முடித்திருக்கிறார். டீசர் தயாரித்து முடித்த பின், அதை பல முறை போட்டு பார்த்த இயக்குநர், அதை தனக்கு வேண்டப்பட்டவர்கள் சிலருக்கும் போட்டு காண்பித்து, அவர்கள் சொன்ன விவரங்களையும் வைத்து, மீண்டும் டீசரை மெருகூட்டி உள்ளார். தற்போது, டீசர் வெளியிட தயாராக உள்ள நிலையில் ராஜேஷ் எம். செல்வா, டுவிட்டர் மூலம் பதிவிட்டு, தெரிவித்திருக்கும் தகவல் வருமாறு:

'கடாரம் கொண்டான்' படமே மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. படம் ரிலீசாவதற்கு முன், ஏற்கனவே அறிவித்தது போலவே, டீசரை 15ல் வெளியிட்டு விட வேண்டும் என்று, தொழில் நுட்பக் கலைஞர்களுடன் கூடவே இருந்து தயாரித்து விட்டேன். வெளியிட தயார் நிலையில் டீசர் உள்ளது. டீசர் மிகப் பிரம்மாண்டமாகவும், சிறப்பாகவும் வந்திருக்கிறது. விக்ரம் ரசிகர்களுக்கு டீசரே மிகப் பெரிய விருந்தாக இருக்கும்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சூர்யாவின் தங்க மனசுசூர்யாவின் தங்க மனசு பைக்கில் சுற்றும் சினிமா பிரபலங்கள்! பைக்கில் சுற்றும் சினிமா பிரபலங்கள்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in