இன்று 85வது பிறந்தநாள் : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ‛ஆச்சி' மனோரமா | சில்க் ஸ்மிதாவுக்கு சமர்ப்பணம் செய்த காஜல் பசுபதி | உன் குறிக்கோள் சரியாக இருந்தால் ஒவ்வொரு அடியும் உனக்கானது : கேப்ரில்லா செல்லஸ் | விதவிதமான புடவைகளில் அழகாக போஸ் கொடுத்த கண்மணி மனோகரன்! | ஆல்யாவை போல போஸ் கொடுத்த அய்லா | உங்களில் யார் அடுத்த ஸ்டார் : ஜீ தமிழ் நடத்தும் மெகா ஆடிசன் | நவாசுதீன் சித்திக்கிற்கு பிரென்சு ரிவேரியா விருது | கங்குலி வாழ்க்கையை இயக்குவது ஐஸ்வர்யா ரஜினிகாந்தா? | பிக்பாஸ் 6ல் இமானின் மாஜி மனைவி பங்கேற்கிறாரா? | கமல் பேசிய ஆபாச வசனத்தை போஸ்டராக ஒட்டிய ரசிகர்கள் மீது வழக்கு பதிவு |
குயின் ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக், காஜல் அகர்வால் நடிப்பில் பாரிஸ் பாரிஸ் என்ற பெயரில் உருவாகியுள்ள நிலையில், தெலுங்கில் தமன்னா நடிப்பில் மகாலட்சுமி, மஞ்சிமா மோகன் நடிப்பில் மலையாளத்தில் ஜம் ஜம், பருல் யாதவ் நடிப்பில் கன்னடத்தில் பட்டர்பிளை என்ற பெயரில் தயாராகியுள்ளது. தமிழ் கன்னட படத்தை ரமேஷ் அரவிந்த இயக்கி உள்ளார்.
தெலுங்கு படத்தை முதலில் நீலகண்டா என்பவர் இயக்கினார். ஆனால் அவருக்கும் தமன்னாவுக்குமிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, பின்னர் பிரசாந்த் வர்மா இயக்கினார்.
சமீபத்தில் நான்கு மொழிகளிலும் ஒரே நேரத்தில் டீசரை வெளியிட்டனர். நான்கு மொழி டீசர்களிலும் தமிழில் டீசர் அமோக வரவேற்பை பெற்றது. அதற்கு முக்கிய காரணம் படத்தில் இடம்பெற்ற அந்த சர்ச்சை காட்சி.
இந்நிலையில், இப்போது நான்கு மொழிகளிலும் முதல் சிங்கிள் டிராக்கை ஜன.,16ம் தேதி வெளியிடுகின்றனர். திருமணத்தை மையமாக வைத்து இந்தப்பாடல் உருவாகி உள்ளது.