Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அஜித் நம்பிக்கையைக் காப்பாற்றி விட்ட இயக்குனர் சிவா

14 ஜன, 2019 - 12:46 IST
எழுத்தின் அளவு:
Siva-saves-Ajiths-Confident

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களுக்குப் படம் இயக்கும் இயக்குனர்களுக்கு எப்போதுமே ஒரு பதட்டம், திண்டாட்டம் இருக்கும். அந்தந்த நடிகர்களின் ரசிகர்களுக்குத் திருப்திகரமான காட்சிகள் இல்லை என்றால் அவர்கள் வேறு யாரையும் திட்டமாட்டார்கள், இயக்குனர்களைத்தான் திட்டுவார்கள்.

அப்படி ஒரு மோசமான அனுபவத்தை அஜித் நடித்த விவேகம் படத்திற்குப் பிறகு பெற்றவர் இயக்குனர் சிவா. அந்தப் படத்திற்கு முன்பு அவர் வேதாளம் என்ற பெரிய வெற்றிப் படத்தையும், வீரம் என்ற சுமாரான வெற்றிப் படத்தையும் கொடுத்ததைக் கூட அஜித் ரசிகர்கள் மறந்துவிட்டார்கள்.

நான்காவதாக மீண்டும் அஜித்துடன் சிவா இணைகிறார் என்றதுமே கடுமையான தாக்குதல்கள் சிவா நோக்கிப் பாய்ந்தது. விஜய் ரசிகர்கள் கூட, நாங்கள் எதுவும் செய்ய வேண்டாம், அதை சிவாவே செய்துவிடுவார் என்று கிண்டலடிக்கும் அளவிற்கு விஸ்வாசம் படத்திற்கு முன்பாக பலமான கிண்டல்கள் எழுந்தன.

ஆனால், விஸ்வாசம் படத்தின் வெற்றி அனைத்துக் கிண்டல்களையும், தாக்குதல்களையும் முறியடித்து, தற்போது பேட்ட படத்தின் தமிழ்நாடு வசூலையும் மிஞ்சி போய்க் கொண்டிருக்கிறது என்ற செய்தி வந்தவுடன் மகிழ்ச்சியடைந்த முதல் ஆளாக இயக்குனர் சிவா தான் இருந்திருப்பார்.

விஸ்வாசம் படத்தின் முதல் காட்சியை சிவா ரசிகர்களுடன் அமர்ந்து தியேட்டரில் அதிகாலைக் காட்சி பார்த்த போது, அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள். அப்போதே சிவாவுக்கு படத்தின் வெற்றி உறுதியாகி இருக்கும். இன்று அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது குடும்பத்தினருடன் பலரும் படத்தைப் பார்த்து வசூலை அள்ளிக் கொடுத்து வருகிறார்கள்.

விவேகம் படத்தின் விமர்சனங்களுக்குப் பின்னும் தன் மீது அஜித் வைத்த நம்பிக்கையை சிவா காப்பாற்றிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
வேகமாக வளரும் 'அயோக்யா'வேகமாக வளரும் 'அயோக்யா' விஜய் படத்தில் நடிக்கும் ரோபோ சங்கரின் மகள் விஜய் படத்தில் நடிக்கும் ரோபோ ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

Kailash - Chennai,இந்தியா
15 ஜன, 2019 - 20:24 Report Abuse
Kailash விவேகம் அருமையான படம் அது போல ஹாலிவுட் தரத்தில் தமிழில் இனி வரப்போவது இல்லை நம்ம ஊர் மக்களுக்கு கிராமம் பஞ்சாயத்து அடிதடி பஞ் டயலாக் பத்துபேரை தூக்கி அடிப்பது ஸ்டைலா பேசுவது என்று இருந்தால் தான் நன்றாக இருக்கும், விவேகம் james bond போன்ற spy thriller படம் உலக சினிமா பார்பவர்கள் மிகவும் ரசிப்பார்கள்
Rate this:
Ranganathan Venkata Subramanian - COIMBATORE,இந்தியா
14 ஜன, 2019 - 16:00 Report Abuse
Ranganathan Venkata Subramanian தல தலைதான் மனம் போல் மாங்கல்யம்
Rate this:
Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
14 ஜன, 2019 - 15:55 Report Abuse
Vasudevan Srinivasan உண்மைதான் 'விஸ்வாசம்' படம் பார்த்தேன் நல்ல பொழுதுபோக்காக படம் அதே சமயம் படத்தில் நல்ல மெசேஜும் இருக்கு.. இமான் அவர்கள் இசையில் வந்த 'ஜில்லா' படத்தின் பாடலை அடிக்கடி இடித்துரைப்பதுண்டு 'எப்போ மாமா ட்ரீட்டு' என்ற அந்த கர்ணகொடூரமான பாடல்.. ஆனால் இந்த 'விஸ்வாசம்' படத்தில் பாடல்கள் எல்லாம் அருமை.. படக்குழுவுக்கு வாழ்த்துக்கள்..
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
14 ஜன, 2019 - 15:48 Report Abuse
Raman Ganesan பேட்ட 100 கோடி வசூல் அப்படினு செய்தி போட்டிங்க இப்ப எப்படி
Rate this:
Raghuraman Narayanan - Machester,யுனைடெட் கிங்டம்
14 ஜன, 2019 - 14:51 Report Abuse
Raghuraman Narayanan First half was slow. But second half was fast moving. Overall, good movie though not a wow movie.
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in