Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒரே நாளில் மூன்று படங்கள்: கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்

14 ஜன, 2019 - 10:57 IST
எழுத்தின் அளவு:
Keerthy-sureshs-Three-Movies-releasing-on-Pongal-day

யாருக்கு எப்படியோ தெரியாது. ஆனால், கடந்த ஆண்டு, நடிகை கீர்த்தி சுரேஷுக்கு மிக மிக ராசியான ஆண்டு. 'தானா சேர்ந்த கூட்டம்', 'நடிகையர் திலம்', 'சீமராஜா', 'சாமி 2', 'சண்டைக் கோழி 2', 'சர்க்கார்' என வரிசையாக பல படங்கள் வெளியாகின. இவற்றில் 'நடிகையர் திலகம்' படமும், விஜய் நடிப்பில் உருவான 'சர்க்கார்' படமும் வசூலிலும் சாதனை படைத்தது.

இந்த ஆண்டும் அவர் பல படங்களில் நடிக்க திட்டமிட்டிருக்கிறார். பல படங்களில் நடிக்கவும், பலர் கேட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறும் கீர்த்தி சுரேஷ், இதுவரை ஒரு தமிழ் படத்தில் கூட கமிட் ஆகவில்லை. மலையாளத்திலும், தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்கிறார்.

ஆனால், வரும் பொங்கல் நாளில் அவரது மூன்று படங்கள் தொலைக்காட்சிகளில் திரையிடப்பட உள்ளன. திங்கள் காலை 11:00 மணிக்கு, 'சாமி 2' திரைப்படமும், மாலை 4:30 மணிக்கு 'நடிகையர் திலகம்' திரைப்படமும், மாலை 6:30 மணிக்கு 'சண்டைக் கோழி 2' திரைப்படமும் திரையிடப்பட உள்ளது.

இப்படி ஒரே நாளில் நடிகை கீர்த்தி சுரேஷின் மூன்று படங்கள் ஒளிபரப்பாக உள்ளதால் அவர் சந்தோஷம் அடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இப்படி, ஒரே நாளில், ஒரு நடிகையின் மூன்று படங்கள், மூன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது இல்லை என்பதால், அதை தனி சிறப்பாக பேசுகிறது திரையுலகம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
அஜித்தின் புது பரிமாணம் : விவேகாஅஜித்தின் புது பரிமாணம் : விவேகா வேகமாக வளரும் 'அயோக்யா' வேகமாக வளரும் 'அயோக்யா'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bhaskaran - Chennai,இந்தியா
15 ஜன, 2019 - 10:17 Report Abuse
Bhaskaran ஒரேசமயத்தில் ஒரு நடிகை நடித்து பலப்படங்கள் வெளியாகி அவை நூறு நாட்கள் ஓடியது தெலுங்கில் க்ரிஷ்ணகுமாரிக்கு மட்டுமே என்று படித்துள்ளேன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in