Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரூபாய் நோட்டில் கையெழுத்து : யாசிகாவுக்கு வசவு

14 ஜன, 2019 - 10:20 IST
எழுத்தின் அளவு:
Signature-in-Currency-:-Fans-trolls-Yashika-Anand

'இருட்டு அறையில் முரட்டுக் குத்து' படத்தில் நடித்து பிரபலமான யாசிகா ஆனந்த், 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், ரொம்பவே பிரபலம் ஆனார். அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வரிசையாக வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அவர் பொழுது போக்கிற்காக சமீபத்தில், தீம் பார்க் ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு அவரை சூழ்ந்து கொண்ட பள்ளி மாணவர்கள், அவரிடம் ஆட்டோகிராப் வாங்கினர். அப்போது ஒரு மாணவர், கையில் நோட்டோ, பேப்பரோ இல்லாததால், இருந்த இருநூறு ரூபாய் நோட்டை எடுத்து யாசிகா ஆனந்திடம் கொடுத்தார். உடனே, அந்த ரூபாய் நோட்டை வாங்கி, அதில் கையெழுத்திட்டுக் கொடுத்தார் யாசிகா.

ரூபாய் நோட்டில் ரிசர்வ் வங்கி கவர்னர் தான் கையெழுத்திட வேண்டும் என்ற அடிப்படை விஷயம் கூட தெரியாதோடு, ரூபாய் நோட்டில் கிறுக்குவது, எழுதுவது இதெல்லாம் தவிர்க்கப்பட வேண்டியது மட்டுமல்ல; குற்றம் என்பது கூட தெரியாமல், நடிகை யாசிகா இப்படியெல்லாம் நடந்து கொள்கிறாரே என, இந்த விவரங்களை தெரிந்தவர்கள், சமூக வலைதளங்களில் யாசிகாவை கடுமையாக வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
திருமணம் செய்ய ஆசையில்லை: கீர்த்தி சுரேஷ்திருமணம் செய்ய ஆசையில்லை: கீர்த்தி ... அரைநிர்வாணமாக கடல் கன்னி போஸ் தந்த ஆண்ட்ரியா அரைநிர்வாணமாக கடல் கன்னி போஸ் தந்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
14 ஜன, 2019 - 13:20 Report Abuse
Mirthika Sathiamoorthi அட விடுங்க பாஸ், படிப்பு வாசனையே இல்லாத ஒருத்திகிட்ட வேற எண்ணத்தை எதிர்பாக்க முடியும்...
Rate this:
Girija - Chennai,இந்தியா
14 ஜன, 2019 - 12:18 Report Abuse
Girija தருதலைகள் அப்பா அம்மா கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தின் அருமை தெரிந்தால் ரூபாய் நோட்டுக்கள் மீது மரியாதையை இருக்கும். அதுவும் இல்லாமல் இந்த நடிகை நடித்தபடமும் மாணவர்கள் பார்ப்பதற்கு உகந்தது அல்ல . i
Rate this:
Sri Ra - Chennnai,இந்தியா
14 ஜன, 2019 - 11:36 Report Abuse
Sri Ra போட்டதும் வாங்குனதும் ரெண்டு ....
Rate this:
14 ஜன, 2019 - 10:33 Report Abuse
sura Gopalan பள்ளி மாணவர்கள் Abdul Kalam கிட்ட ஆட்டோகிராஃப் வாங்கும் காலம் போய் இப்ப இந்த மாதிரி தருதலை கிட்ட ஆட்டோகிராஃப் வாங்கும் காலம் வந்துவிட்டது. அதுவும் ரூபாய் நோட்டில்.
Rate this:
vijai - ,
14 ஜன, 2019 - 12:01Report Abuse
vijaievaluku ellam panamthodo arumai therium...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in