Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருமணம் செய்ய ஆசையில்லை: கீர்த்தி சுரேஷ்

13 ஜன, 2019 - 14:50 IST
எழுத்தின் அளவு:
i-have-no-wish-in-marriage-says-keerthi-suresh

'திருமணம் செய்து கொள்ளும் ஆசை தற்போது தனக்கு இல்லை' என அதிர்ச்சி குண்டை வீசியிருக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவான 'சர்க்கார்' படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷ், தமிழ் பட உலகின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருக்கிறார். தொடர்ச்சியாக தமிழ் படங்களில் நடித்து வரும் அவர், சமீபத்தில் அளித்த பேட்டி:


நான் படிக்கும் காலத்தில், ஒரு நாளும் சினிமா நடிகை ஆவேன் என்று நினைத்தது கிடையாது. படிப்பை முடித்த பின், மாடலிங் செய்து வந்தேன். மலையாளப் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. ரொம்பவும் யோசித்துத்தான், சினிமாவில் நடிக்க முடிவெடுத்தேன். என்னுடைய நல்ல நேரம், மலையாளப் படத்தில் நடித்தது எனக்கு பெருமையைத் தேடித் தந்தது. நடிகை என்ற புகழ் வெளிச்சத்திற்கு வந்ததும், எனக்கு தமிழ் சினிமாவில் நடிக்க அழைத்தனர். அப்போதும் மிகுந்த தயக்கத்துடன் தான் நடிக்க வந்தேன். இங்கும் எனக்கு நல்ல வரவேற்பு இருந்தது. எனக்கு தமிழ் பட உலகம் ஆதரவும், அடையாளமும், அங்கீகாரமும் அளித்தது. அதனால், நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்.


தமிழ் சினிமா பட உலகைப் பொறுத்த வரை, இளம் இயக்குநர்கள் நிறைய பேர், அடுத்தடுத்து படம் இயக்க வருகின்றனர். எல்லோருமே வித்தியாசமான சிந்தனைகளோடும்; திறனோடும் களம் இறங்குகின்றனர். தமிழ் ரசிகர்களும் தரமான படங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற தெளிவான மன நிலையில் உள்ளனர். அதனால், நாமும் சினிமாவில் நிலைக்க நிறைய உழைக்க வேண்டும். நன்கு உழைப்பதால்தான், இந்த அளவுக்கு உயர்ந்திருக்கிறேன் என்பதை நான் உணர்கிறேன். சினிமாவில் பிசியாக இருக்கும் இந்த நேரத்தில், நான் திருமணம் குறித்து யோசிக்கவில்லை. இன்னும் நிறைய படங்களில் நடிக்க விருப்பப்படுகிறேன்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
100 கோடியைக் கடந்த 'பேட்ட'100 கோடியைக் கடந்த 'பேட்ட' ரூபாய் நோட்டில் கையெழுத்து : யாசிகாவுக்கு வசவு ரூபாய் நோட்டில் கையெழுத்து : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

prem - manama  ( Posted via: Dinamalar Windows App )
14 ஜன, 2019 - 10:38 Report Abuse
prem already look like a aunty
Rate this:
s t rajan - chennai,இந்தியா
13 ஜன, 2019 - 22:55 Report Abuse
s t rajan பல சிறந்த திரைக் கலைஞர்கள் திருமணம் செய்து கொள்ளாமலேயே இன்னும் மதிப்புடன் வாழ்கிறார்கள். உதாரணத்திற்கு குமாரி சச்சு அவர்கள்.
Rate this:
naleem - colombo,இலங்கை
13 ஜன, 2019 - 15:08 Report Abuse
naleem நல்ல முடிவு .. ஒரு ஆணின் வாழ்க்கையை காப்பாற்றிய பெருமை உங்களுக்கு கிடைக்கும்...
Rate this:
Manian - Chennai,இந்தியா
14 ஜன, 2019 - 10:45Report Abuse
Manianதவறான சிந்தனை. அவருடைய எல்லை என்பது தெறியும் வரை அவர் நடிப்பது நல்லதே. ஒரு வேளை வர்றவன் குடிகாரனாக இருந்து பிரிந்தால், தனியாக வாழ காசும் வேண்டுமே. ஆண்களுக்கும் இந்த நீதி பொருந்தும் - பேச்சுலராக இருப்பவன் பல பெண்களை காப்பாறினான். சரியான கணவன், மனைவி அமைய மிகவும் தேடுதல் வேண்டும்.வாழ்க்கைக்கு எது முக்கியம் என்பது தெரிந்த பின், மணந்தால் இருவருக்கும் நல்லது. ஆனால், அதற்க்கு,பொறுமை, அன்பான குடும்பம்- தாய் தந்தை, கல்வி, நீண்ட கால சந்தோஷம் வேண்டும் என்ற மனப்பான்மை, புரிதல், விட்டுக்கொடுக்கும் குணம் போன்றவற்றை தேட வேண்டும். சுமார் 20% அப்படி செய்கிறார்கள். அவர்கள் கடைசிவரை மகிழ்ச்சியாக இருந்தே சாகிறார்கள்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Andha Nimidam
  • அந்த நிமிடம்
  • நடிகர் : புதுமுகம்
  • நடிகை : புதுமுகம்
  • இயக்குனர் :குழந்த ஏசு
  Tamil New Film Party
  • பார்ட்டி
  • நடிகர் : ஜெய் ,
  • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :வெங்கட் பிரபு
  Tamil New Film En Kadhali Scene Podura
  Tamil New Film Pettikadai
  • பெட்டிக்கடை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in