Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'பேட்ட' ரஜினிகாந்த், பா.ரஞ்சித் மீது கடும் விமர்சனம்

13 ஜன, 2019 - 14:38 IST
எழுத்தின் அளவு:
after-petta,-rajini-fans-criticize-pa.ranjith

தமிழ் சினிமாவில் மிகப் பெரும் வசூல் நாயகனாக கடந்த 40 வருடங்களாக இருந்து வருபவர் ரஜினிகாந்த். ஆனால், அவருடைய கடைசி சில படங்கள் பெரிய அளவில் வசூல் சாதனை புரியவில்லை.

'சிவாஜி' படத்தில்தான் மிகவும் துடிப்பான, ஸ்டைலிஷான, பரபரப்பான ரஜினியைப் பார்க்க முடிந்தது. அதன் பின் வெளிவந்த 'எந்திரன், லிங்கா' படங்களில் கூட அவர் இளமையான தோற்றத்தில்தான் நடித்தார்.


ஆனால், 'கபாலி' படத்தில் ரஜினிகாந்த்தை வயதான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து, ரஜினியை வேறு பக்கம் திசை திருப்பி விட்டதில் அப்படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு பெரும் பங்குண்டு. அடுத்து அவர் இயக்கிய 'காலா' படத்திலும் ரஜினிகாந்தை ஒரு தாத்தாவாகவே மாற்றினார். அந்த இரண்டு படங்களும் ரஜினி ரசிகர்களை துளி கூட திருப்திப்படுத்தவில்லை.


பழைய ரஜினியை மீண்டும் பார்க்க மாட்டோமா என்று ஏங்கிய ரஜினி ரசிகர்களுக்கு 'பேட்ட' படத்தின் மூலம் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சரியான விருந்து கொடுத்திருக்கிறார். ரஜினி ரசிகர்கள், நடுநிலை ரசிகர்கள், திரையுலகப் பிரபலங்கள் பலரும் ரஜினியை பழைய பார்முக்கு கார்த்திக் சுப்பராஜ் கொண்டு வந்துவிட்டார் என்று பாராட்டி வருகிறார்கள்.


அவர்களில் பலரும் மறைமுகமாக 'கபாலி, காலா' படங்களைப் பற்றி கிண்டலடித்து வருகிறார்கள். ரஜினியை ரசிகர்களிடம் இருந்து விலகிச் செல்ல வைத்ததில் ரஞ்சித்துக்கு அதிகப் பங்கிருப்பதாக கருத்து தெரிவித்துள்ளார்கள்.


'பேட்ட' படத்தின் வசூலும் அதை நிரூபித்து வருகிறது. 'கபாலி, காலா' படங்களை விட இந்தப் படம் அதிக வசூலைப் பெறும் என்று கோலிவுட் வட்டாரங்களில் எதிர்பார்க்கிறார்கள்.


Advertisement
கருத்துகள் (13) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி - கமல் நண்பர்கள் இல்லை: சரத்குமார்ரஜினி - கமல் நண்பர்கள் இல்லை: ... 100 கோடியைக் கடந்த 'பேட்ட' 100 கோடியைக் கடந்த 'பேட்ட'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (13)

Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20 ஜன, 2019 - 17:38 Report Abuse
Ramesh Rayen நம் மக்கள் கனவு காண்பதில் வல்லவர்கள் அதே போல் கனவுலக நாயகர்கள் அப்படியே இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள்
Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19 ஜன, 2019 - 17:44 Report Abuse
Pugazh V பேட்ட படத்தில் பாஜகவினரின் முகத்திரையை கிழித்து பாஜகவினரின் வன்முறை அராஜகங்களை விஜய்சேதுபதி கேரக்டர் மூலமாக (காதலர் தினத்தன்று இளைஞர்களை அடித்து துவைப்பது, ஒருவனை அடிக்கும்போது ஏன் என்று கேட்டபோது ஆன்ட்டி இண்டியன் ஆண்ட்டி இண்டியன் என்று சொல்வது, இவரையே போட்டு தள்ள வருபவர்களிடம் ஏன் என்று கேட்டால், பீஃப் வெச்சுருக்கே என்று சொல்லி தாக்குவது) சாடியிருப்பதை ஏன் தமிழிசை, எச் ராஜா கண்டித்து அறிக்கை விடவில்லை???
Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19 ஜன, 2019 - 17:33 Report Abuse
Pugazh V எந்த ரசிகனும் பா.ரஞ்சித் மீது எந்த கோபமும் கொள்ளவில்லை. முன்பு கூட ரஜினியின் பல படங்கள் வசூலில் தோல்வி ( 6லிருந்து60 வரை, வள்ளி வரப்போறா) அடைந்தபோதும் எந்த ரசிகரும் இயக்குநரை திட்டினதில்லை.
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
19 ஜன, 2019 - 04:04 Report Abuse
meenakshisundaram ரஞ்சித்தை ஆதரித்து Rajni தனது முகத்தில் சாயத்தை ,கரி பூசிக்கொண்டது அனைவரும் அறிந்ததே. ரஞ்ஜித் பெரும்பான்மை மக்களின் பொறுமைத்தன்மையை உபயோகித்து தனது சொந்தமான கொள்கை(?) பரப்ப முயன்று இருப்பதையும் கெடுத்துக்கொண்டார். ஆனால் தகுதியின்றி 'சம்பாதித்தது 'காலத்தின் கோலமே.
Rate this:
Kishore Kumar - Bangalore,இந்தியா
18 ஜன, 2019 - 09:17 Report Abuse
Kishore Kumar சிம்பிள் பாஸ், யாரு வேணாலும் விஜய் சேதுபதி, தனுஷ்ஐ மாதிரி நடிக்கலாம், அவங்க இடத்தை பிடிக்கலாம், அனால் No One Can replace Rajini
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in