Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சீண்டினால் பதிலடி: பெண்களுக்கு சரீன் கான் வேண்டுகோள்

13 ஜன, 2019 - 14:29 IST
எழுத்தின் அளவு:
zareen-khan-advised-womens

நடிகை சரீன் கான், சமீபத்தில் அவுரங்காபாத்தில், நிகழ்ச்சி ஒன்றுக்காக சென்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும்போது, அங்கு கூடியிருந்த கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டார். அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு நபர், நடிகை சரீன் கானை, கரங்களால் சீண்டியுள்ளார். அதை அருவெறுப்பாக உணர்ந்த சரீன் கானுக்கு கடும் கோபம் வந்து விட்டது. உடனே, சம்பந்தப்பட்ட நபரை, கூட்டத்துக்கு நடுவிலேயே அடித்து துவைத்து விட்டார். இதை கூட்டத்தில் இருந்தவர்கள் விடியோ பதிவு எடுத்து, அதை சமூக வலைதளங்களில் பரவவிட்டுள்ளனர்.

இது குறித்து சரீன் கான் கூறியிருப்பதாவது:


சில நேரங்களில் பிரச்னைகளை பெண்களாகிய நாமே நேரடியாக கையில் எடுத்துக் கொள்ள வேண்டும். வெளி பார்வைக்கு அதெல்லாம் எப்படி இருக்கிறது என்ற கவலையெல்லாம் ஒரு போதும் இருக்கக் கூடாது. பெண்ணை சீண்டினால், உடனே அதற்கு தண்டனை கிடைக்கும் என எல்லோரும் உணர வேண்டும். மூடிய கதவுக்குள் நடந்தாலும் சரி; வெளியே நடந்தாலும் சரி... ஒரு ஆண் பெண்ணிடம் விருப்பமின்றி தகாத முறையில் நடந்து கொண்டால், உடனடியாக அவனுக்கான தண்டனையை கொடுக்க வேண்டும்; இதை ஒரு பெண்ணாக அனைவரும் செய்வீர்கள் என நம்புகிறேன். நான் பொதுமக்கள் அறிந்த ஒரு நபராக இருப்பதாலேயே, யாரும் என்னிடம் தவறாக நடந்து கொண்டால், அதைப் பார்த்து சும்மா இருக்க முடியாது. என்னைப் பொறுத்த வரை, எந்தப் பெண்ணாக இருந்தாலும், அவருக்கு மற்றவர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறதோ, அது இருக்க வேண்டும். இல்லையென்றால், சீண்டலுக்கு பதிலடிதான் கொடுக்க வேண்டும்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
எங்கிருந்தாலும் ஸ்ரீதேவி வாழ்த்துவார்: போனிக் கபூர்எங்கிருந்தாலும் ஸ்ரீதேவி ... காருக்குள் பலாத்காரம் செய்ய முயற்சி: பிதிதா பக் திடுக்கிடும் தகவல் காருக்குள் பலாத்காரம் செய்ய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in