Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யை பெருமைப்படுத்திய நடிகை கஸ்தூரி

13 ஜன, 2019 - 14:11 IST
எழுத்தின் அளவு:
kasturi-honored-vijay

கபாலி, காலா படங்கள் வெளியான நேரத்தில் ரஜினி ரசிகர்களிடம் டுவிட்டரில் மல்லுக்கட்டி வந்தவர் நடிகை கஸ்தூரி. அதன்பிறகு சர்கார் படம் வெளியானபோது விஜய் ரசிகர்களின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்து அவர்களின் கண்டனத்திற்கு ஆளானார்.

அதையடுத்து தற்போது அஜீத் ரசிகர்களிடமும் மோதலில் ஈடுபட்டு வரும் கஸ்தூரி, ஒரு பேட்டியில், சர்கார் சர்ச்சை குறித்து ஒரு கருத்து கூறியிருக்கிறார். அதாவது, விஜய் ரசிகர்களும் ரஜினி, அஜீத் ரசிகர்களைப்போன்று உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள்தான். அதைதான் சர்கார் படத்திற்கான எதிர்ப்பு எழுந்தபோது அவர்கள் வெளியிட்டார்கள்.


ஆனபோதும், சர்கார் சர்ச்சையின்போது விஜய் அமைதியாக இருந்தார். அதைப்பார்த்து அவர் பயந்து விட்டதாக சிலர் சொன்னார்கள். ஆனால் பயப்படுவதற்கும், விட்டுக்கொடுப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. விட்டுக்கொடுப்பது பெரிய மனுஷத்தன்மை என்று சொல்லி விஜய்யை பெருமைப்படுத்தியிருக்கிறார் கஸ்தூரி.


Advertisement
கருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய
ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளான காஜல்அகர்வால்ரசிகர்களின் கிண்டலுக்கு ஆளான ... ரஜினி - கமல் நண்பர்கள் இல்லை: சரத்குமார் ரஜினி - கமல் நண்பர்கள் இல்லை: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (5)

Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
14 ஜன, 2019 - 15:33 Report Abuse
Mirthika Sathiamoorthi விஜயை பேசும் முன் நடிகர்களின் அரசியல் குறித்த வரலாற்றை தொடாமல் இருக்க முடியாது..MGR அண்ணாவின் தலைமையை ஏற்றபோது அவர் காமராஜரின் மீதும் மரியாதையுடன் இருந்தார்..தன படங்களில் அண்ணா புகழ்பாடும் அவர் காமராஜரை எதிர்க்காமல் ஒரு பொது நிலைமையில் பயணித்தார் ..அதனால் யாரும் MGR ஐ மிகப்பெரிய அரசியல் சக்தியாவார் என நினைக்கவில்லை ... அவர் அரசியல் சக்தியானபோது இதே போல் சிவாஜியும் வந்துவிடக்கூடாதென்று மூப்பனார் அவருக்கு முட்டுக்கட்டை போட்டார்.( திருச்செந்தூர் இடைத்தேர்தலில் சிவாஜியின் பிரச்சாரம் இல்லாமல் வெற்றிபெற்றதை காங்கிரஸ் தலைமைக்கு சுட்டிக்காட்டினார் )....2006 தேர்தலில் விஜயகாந்த் கருப்பு எம்ஜிஆர் என தன்னை காட்டி 8% ஒட்டு வாங்கியபோது, தனது தோல்விக்கு விஜயகாந்த் தனக்கு வரவேண்டிய ஓட்டை பிரித்ததாக ஜெயலலிதா எண்ணியதால்..அடுத்த தேர்தலில் விஜயகாந்துடன் கூட்டணி எனும் அஸ்திரத்தை எடுத்தார்...இந்தநேரத்தில் வேலாயுதம் படத்தில் விஜய் MGR ஐ முன்னிறுத்தியதும் ஓட்டில் பங்கெடுக்க வாரீங்களான்னு விஜயின் நலத்திட்ட நிகழ்ச்சித்தடைன்னு கடுமையா எதிர்த்தார்..யாரும் விஜய்க்கு ஆதரவா குரல் எழுப்பலை..கலைஞர் அதை அதிமுக கட்சி பிரச்சனைன்னு கண்டுக்கவே இல்லை....பல இடங்களில் ஜெயா விஜய்க்கு எதிரே கடுமையாய் எதிர்வினை செஞ்சார்....விஜய் சீண்டும் அதே சமயம் ரஜினியை சீண்ட அணைத்து கட்சிகளும் முயற்சிகளே...பேட்ட படத்தில் மணல் கொள்ளை, விவசாயம், ஜாதியம், இந்துத்துவா, மாட்டுக்கறி சர்ச்சை பல பேசியும்,காம்ம்ன்னு இருக்குங்க.. GST பத்தி ஒருவார்த்தை பேசியதற்கு மெர்சலுக்கு பொங்கிய பிஜேபி பேட்டைக்கு கம்ன்னு ஆனப்பவே தெரியும் ரஜினி வேற விஜய் வேற....ரஜினியை எதிர்க்கக்கூடாது என தனது அணைப்பில் வைத்துக்கொண்டார் கலைஞர் ...ரஜினியின் மீதான கசப்பை நீக்கி அவருக்கு மெதுவான போக்கினை கையாண்டார் ஜெயலலிதா விஜயைக்கு மட்டும் அப்படி ஒரு எதிர்வினை ( தலைவா படத்திற்கு சொல்லவே வேண்டாம்...கொடநாடுவரை விஜய் போக வேண்டியதாச்சு )...மோடி ரஜினியை வீடுதேடி வந்து பார்த்தார்..ஆனா விஜய் மோடியை போய் பாக்கும் நிலையில் இருக்கார்...எல்ல அரசியல் கட்சிகளும் ரஜினியை இப்போ எதுவும் செய்யவேண்டாம்..கட்சி ஆரம்பிச்சவுடன் பாத்துக்கலாம்ன்னு கம்முன்னு இருக்கு....நாளைக்கு அரசியலுக்கு வரும்போது விஜய் பெரும் சக்தியாக கூடாதுன்னு எல்லோரும் அடிக்கசெய்வாங்க...( சிகரெட் குடிச்ச விஜயை மட்டும் டார்கெட் பண்ணுவாங்க ) மெர்சல் பட பிரச்னையில் ஆளும் தரப்பு முதல்வரை விஜய் பார்த்ததால் எடப்பாடி இவருக்கு சாதகமாக இருந்து படம் ஓட அனுமதித்தது..அதை விஜய் என்ன கணக்கு போட்டாரோ தெரியாது, அடுத்த படத்தில் ஆளும் தரப்பின் மீதான தாக்குதல் அவர்களுக்கு கடும் எரிச்சலைக்கொடுத்தது ரொம்ப ஈஸி டார்கெட்டுன்னு விஜய் படத்தை வச்சு செஞ்சாங்க...அதை விஜயாள் எதிர் கொள்ளமுடியலைங்கறது அவர் மௌனம் சாட்சி....தன் வழியும் துணை வழியும் மாற்றான் வழியும் தூக்கிச்செயல்....தன்னை தயார் பண்ணிக்கற வரை அமைதியா இரு....இல்ல திருப்பி அடி..இதுதான் அரசியல் நிலைப்பாடு..திருப்பியும் அடிக்க மாட்டேன்..அரசியலுக்கு வருவேன்னாஎப்புடி? விஜயின் செயல் பாடுகள் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசைன்னு இருக்கு..இப்போ சீமானுக்கு வருவோம்..நல்லதோ கெட்டதோ தமிழன் ஆளணும்ன்னு ரஜினிக்கு எதிரே நிக்கிறார்...அப்போ ஆளப்போறான் தமிழன் அப்புடின்னு விஜய் வரும் போது நாம் தமிழர் சீமான் தலைமையில் விஜய் இணையும்போது மிக உயரத்துக்கு போயிடலாம்ன்னு நினைக்கிறாங்க..ஆனா SA சந்திரசேகர் விஜயை தனி தலைவரா ஆகணும்ன்னு நினைக்கிறார்...அப்போ அரசியல்வந்து பெரும் ஆளுமைகளை எதிர்த்து சிறை சென்ற சீமான் ஏதிவினையாற்றாம இருப்பாரா? அரசியலுக்கு வரத்துடிக்கும் விஜயை பாத்து கேக்கத்தான் செய்வாரு...சீமான் மீது ரசிகர்கள் கடுமையா கருது சொன்னாலும் சீமான் கோடிட்ட இடங்களை விஜய்யால் மறுக்க முடியாது என்பதே உண்மை....ஆத்துல ஒருகால் சேத்துல ஒருகால் அப்படீங்கிற நிலையில் ரஜினியை ஒரு சக்தியா மூப்பனார் பாத்தாரு, ஜெயலலிதா பாத்தாங்க,கலைஞர் பாத்தாரு...இதே நிலையில் இருக்கும் விஜயை யாரும் ஒரு சக்தியா பாக்களை..தான் அப்படி ஒரு சக்தியா ம்ம் வரை அமைதியா இருக்கணும்...இல்லை எல்லாத்தையும் தயார் படுத்திகிட்டு எதிர்த்து நிக்கணும்...ரெண்டும்கெட்டான் மனநிலையிருந்தால் ஆழாப்போறான் தமிழன்னு சொன்ன அதை பாத்திட்டு இருக்கிற சீமான் விஜய் குணாதிசயத்தி விமர்சிக்கத்தான் செய்வார்...நீங்க நடிகர் ஆனா தலைவராகக்கூடிய பண்பு இல்லைன்னு சீமான் சொல்றார்...இதுக்கு கஸ்தூரி மாதிரி ஆளுங்க என்ன சொன்னாலும் விஜயை பத்தி சீமான் சொன்னதுமருக்க முடியாத ஒன்னு....
Rate this:
Ms. K - ,
13 ஜன, 2019 - 23:16 Report Abuse
Ms. K ஏதாவது ஒரு கருத்து சொல்லி , பரபரப்பை ஏற்படுத்தி limelight ல இருக்கணும்!!!!
Rate this:
Rock -  ( Posted via: Dinamalar Android App )
13 ஜன, 2019 - 22:42 Report Abuse
Rock ஒரு வேளை விக் பறந்து விடுமோ என்ற கவலையா இருக்குமோ.
Rate this:
serupalaiye adipen - ohio,யூ.எஸ்.ஏ
13 ஜன, 2019 - 15:33 Report Abuse
serupalaiye adipen விஜய் பம்பிட்டு இருந்தது ஊருக்கே தெரியும். விஜய்னாலே பம்பல்தான் .. கஸ்தூரி ஈவனுக்கு ஜால்ரா அடிச்சு என்ன கிடைக்கபோகுதுனு தெரியல...
Rate this:
14 ஜன, 2019 - 09:27Report Abuse
Vijay, Bengaluruஉங்கள் பெயர் உங்கள் அய்யாவுக்கு பொருத்தமாக இருக்கும்....
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Andha Nimidam
  • அந்த நிமிடம்
  • நடிகர் : புதுமுகம்
  • நடிகை : புதுமுகம்
  • இயக்குனர் :குழந்த ஏசு
  Tamil New Film Party
  • பார்ட்டி
  • நடிகர் : ஜெய் ,
  • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
  • இயக்குனர் :வெங்கட் பிரபு
  Tamil New Film En Kadhali Scene Podura
  Tamil New Film Pettikadai
  • பெட்டிக்கடை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : சாந்தினி
  • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in