Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வரலட்சுமியுடன் திருமணம்: முற்றுப்புள்ளி வைத்த விஷால்

13 ஜன, 2019 - 13:22 IST
எழுத்தின் அளவு:
vishal-put-end-card-on-marriage-with-varalakshmi-sarathkumar

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் மற்றும் நடிகர் சங்கப் பொதுச் செயலர் என திரைப்பட உலகின் மிக முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் நடிகர் விஷாலுக்கு விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கப் போவதாக தகவல் பரவியது. ஆனால், அது பொய்யான தகவல் என திடுமென தகவல் பரவியது.

இதனால், விஷால் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவியது. இந்நிலையில், இந்தக் குழப்பத்துக்கு தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார் நடிகர் விஷால்.


அவர் கூறியிருப்பதாவது:


ஆந்திராவின் ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் விஜய் ரெட்டி - பத்மஜா தம்பதியருக்குப் பிறந்த அனிஷா ரெட்டி என்பவரைத்தான் நான் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன். எங்கள் திருமணம், பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்ததல்ல. நாங்கள் இருவரும் ஏற்கனவே பல முறை சந்தித்து பேசி, பழகி, காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தோம். அதை, இரு தரப்பு பெற்றோர்களிடம் சொன்னதும், யாரும் அதற்கு மறுப்பு சொல்லவில்லை. எல்லோருடைய விருப்பத்தின் பேரிலேயே காதல் திருமணம் நடக்கவிருக்கிறது. விரைவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும். அன்றைய தினம் முடிவெடுக்கப்பட்டு, திருமண தேதி அறிவிக்கப்படும்.


இவ்வாறு, விஷால் கூறியுள்ளார்.


இதனால், நடிகை வரலட்சுமியை, விஷால் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற தகவலுக்கு முற்றுப்புள்ளி விழுந்துள்ளது.


Advertisement
கருத்துகள் (16) கருத்தைப் பதிவு செய்ய
முருகனை தரிசித்த திருப்தியில் யோகி பாபுமுருகனை தரிசித்த திருப்தியில் யோகி ... நகுல் மனைவி சுருதியின் தோசை சாதனை நகுல் மனைவி சுருதியின் தோசை சாதனை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (16)

Shanu - Mumbai ,இந்தியா
16 ஜன, 2019 - 00:21 Report Abuse
Shanu நான் ஒரு தமிழன் என்று சொல்லி கொண்டு தமிழகத்தில் ஜெயித்தார். கடைசியில் ஒரு தமிழ் பெண்ணை ஏமாற்றி விட்டு ஒரு தெலுங்கு பெண்ணை திருமணம் செய்கிறார்.
Rate this:
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14 ஜன, 2019 - 09:58 Report Abuse
முக்கண் மைந்தன் முத்தினதுக்கு முத்தின நொங்குதான் மாட்டும்....
Rate this:
Angry ஜெய் - Chennai,இந்தியா
14 ஜன, 2019 - 09:06 Report Abuse
Angry ஜெய் இனம் இனத்தோட தான் சேரும் ..... நல்லது ரெட்டிகாரு
Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14 ஜன, 2019 - 08:12 Report Abuse
Srinivasan Kannaiya வரலக்ஷ்மி உண்மையிலேயே விஷாலுடன் காதல் வயப்பட்டு இருந்தால் இப்போ விடுவாரா,,,? அப்போ முதலில் வந்த செயதிகள் வதந்தியா
Rate this:
mindum vasantham - madurai,இந்தியா
14 ஜன, 2019 - 07:25 Report Abuse
mindum vasantham பாவம்டா வரலக்ஷ்மி
Rate this:
மேலும் 11 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in