Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முருகனை தரிசித்த திருப்தியில் யோகி பாபு

13 ஜன, 2019 - 13:17 IST
எழுத்தின் அளவு:
yogibabu-worshipped-lord-muruga-in-australia

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகி பாபு, நடிகர் விஜய் உள்ளிட்ட எல்லா முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து வருகிறார். அவர் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்க, கே.எஸ்.அதியமான் இயக்கும் 'ஏஞ்சல்' திரைப்படத்தின் படபிடிப்பு ஆஸ்திரேலாவியில் நடக்கிறது. அந்தப் படத்தில் உதயநிதியோடு இணைந்து நடிக்கும் காமெடி நடிகர் யோகி பாபுவும் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று இருக்கிறார்.


முருகக் கடவுள் பக்தரான யோகி பாபு, அங்கு சென்றது முதல், இங்கு முருகன் கோவில் எங்கு இருக்கிறது என்றே விசாரித்திருக்கிறார். பின், முருகன் கோவில் ஒன்றை கண்டறிந்து அங்கு சென்று வழிபட்டு திரும்பி இருக்கிறார்.இது தொடர்பாக சமூக வலைதள பக்கம் ஒன்றில் தகவலோடு வீடியோ பதிவு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.


அதில், 'ஆஸ்திரேலியாவுக்கு வந்து பத்து நாட்களாக முருக கடவுளுக்கான கோவிலைத் தேடி அலைந்தேன். பின், கண்டறிந்து கோவிலுக்கு சென்று திரும்பினேன். உலகில் தமிழர்கள் எங்கெல்லாம் இருக்கின்றனரோ, அங்கெல்லாம் முருகன் கோவில் இருக்கும் என்பதற்கு, ஆஸ்திரேலியாவும் விதிவிலக்கல்ல' என கூறியிருக்கிறார்.


Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
அலிடா: பிப்ரவரியில் வெளிவரும் ஹாலிவுட் பிரமாண்டம்அலிடா: பிப்ரவரியில் வெளிவரும் ... வரலட்சுமியுடன் திருமணம்: முற்றுப்புள்ளி வைத்த விஷால் வரலட்சுமியுடன் திருமணம்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Vasudevan Srinivasan - Chennai,இந்தியா
18 ஜன, 2019 - 14:08 Report Abuse
Vasudevan Srinivasan நல்ல மனிதர் இவர் மேலும் வளரவேண்டும்..
Rate this:
13 ஜன, 2019 - 17:16 Report Abuse
நவின் ஆனால் தமிழகத்தில் உள்ள தமிழர்கள் முருகனை மறந்து பல கடவுள்களை வணங்கி வருகிறார்கள். அனைத்து கடவுள்களையும் வணங்குவது நல்லதுதான். ஆனால் தமிழ் கடவுளான முருகனை மறந்தது வேதனைக்குரியதே.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in