Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

எங்கிருந்தாலும் ஸ்ரீதேவி வாழ்த்துவார்: போனிக் கபூர்

13 ஜன, 2019 - 12:52 IST
எழுத்தின் அளவு:
boney-kapoor-emotion-talk-on-thala-59

இந்தி நடிகர் அமிதாபச்சன் நடிப்பில் 2016ல் வெளியான பிங்க் திரைப்படம், இந்தியில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படம் தற்போது, தல 59 என்ற பெயரில், நடிகர் அஜித் நடிக்க தமிழில் மொழி மாற்றம் செய்யப்படுகிறது. படத்தை, மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனிக் கபூர் தயாரிக்கிறார். தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை படங்களை இயக்கிய ஹெச்.வினோத் இயக்குகிறார்.

பொங்கலுக்கு ரிலீசாகி இருக்கும் நடிகர் அஜித்தின் விஸ்வாசம் படத்தைப் பார்ப்பதற்காக மும்பையில் இருந்து சென்னை வந்திருக்கும் போனிக் கபூர் படத்தை சென்னையில் பார்த்து முடித்த பின், பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:


நடிகர் அஜித் மிகச் சிறந்த நடிகர். தமிழகத்தில் அவருக்கென மிகப் பெரிய ரசிகர் வட்டம் உள்ளது. விஸ்வாசம் படம், மிகச் சிறப்பாக வந்துள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும்படியாக உள்ளதால், படம் மிகப் பெரிய வெற்றியை பெறும். இந்தப் படத்துக்கு அடுத்த படமாக தல 59 எடுக்கப்பட்டு வருகிறது. பிங்க் படம் இந்தியில் வெளியாகி வெற்றி அடைந்ததும், அந்தப் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்ய வேண்டும் என்று நடிகை ஸ்ரீதேவி விரும்பினார். பிங்க் படத்தில் சிறப்பாக நடித்த நடிகர் அமிதாபச்சன் கேரக்டரில் நடிகர் அஜித் நடிக்க வேண்டும் என்றும் கூறினார். அதன்பின் தான், பிங்க் படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து தயாரிப்பது என முடிவெடுத்தோம். ஆனால், அதை செய்யும் முன், ஸ்ரீதேவி இறைவனடி சேர்ந்து விட்டார். இருந்தாலும், அவரது விருப்பப்படி, தற்போது பிங்க், தமிழில் தல 59 என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. அமிதாபச்சன் பிங்கில் நடித்த கேரக்டரை தமிழில் அஜித் செய்கிறார். படத்தில் வித்யா பாலனுக்கு மிக முக்கிய கேரக்டர் வழங்கப்பட்டுள்ளது. படம் மிகச் சிறப்பாக வரும். ஸ்ரீதேவியின் எண்ணம் நிறைவேறும். அவர் நம்மோடு இல்லாவிட்டாலும், எங்கிருந்தாகிலும் படத்துக்கும், படக் குழுவினருக்கும் வாழ்த்துக்களை வழங்குவார்.


இவ்வாறு போனிக் கபூர் கூறினார்.


Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
உதட்டு அழகு; நடிகைக்கு சிக்கல்உதட்டு அழகு; நடிகைக்கு சிக்கல் சீண்டினால் பதிலடி: பெண்களுக்கு சரீன் கான் வேண்டுகோள் சீண்டினால் பதிலடி: பெண்களுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Bhaskaran - Chennai,இந்தியா
13 ஜன, 2019 - 18:26 Report Abuse
Bhaskaran அந்த அம்மா சொத்துக்களை முழுதும் ஆட்டையை போட்டாசாப்பா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in