Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அலிடா: பிப்ரவரியில் வெளிவரும் ஹாலிவுட் பிரமாண்டம்

13 ஜன, 2019 - 12:32 IST
எழுத்தின் அளவு:
alitha-to-be-release-on-february

பிப்ரவரியில் பல தமிழ் படங்கள் வெளிவர இருக்கிறது. அந்தப் படங்கள் போட்டியாக கருதுவது தங்களோடு வெளிவரும் மற்ற படங்களை அல்ல... பிப்ரவரி 5ந் தேதி வெளிவர இருக்கும் அலிடா: பேட்டில் ஏஞ்சல். அதற்கு காரணம் இருக்கிறது.

இந்தப் படத்தை அவதார், டைட்டானிக் படங்களை தயாரித்த நிறுவனங்களுடன் இணைந்து பிரபல இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் தயாரித்துள்ளார். அவதார், டைட்டானிக் படத்தை விட பெரிய பட்ஜெட்டில் தயாராகி உள்ளது.


இதில் ரோசா சலாசர், கிறிஸ்டோப் வாட்ஸ், ஜெனிபர் கோனலி உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். டாம் கோல்க்பாங்க் இசை அமைத்துள்ளார், பில்லி போப் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரோசா சலாசர்தான் அலிடா என்ற டைட்டில் ரோலில் நடித்துள்ளார்.


இந்தப் படத்தின் கதையும், எந்திரன் படத்தின் கதையும் ஒரே சாயலை கொண்டது. இந்தப் படத்தின் கதை பல ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது. அப்போது நகரங்கள் உலோகமயமாக இருக்கிறது. மனிதர்கள் தங்கள் உடலில் எந்திரங்களை பொறுத்திக் கொண்டு எந்திர மனிதர்களாக வாழ்கிறார்கள்.


ரோபோ விஞ்சானி கிறிஸ்டோப் வாட்ஸ் உலோக குப்பையில் இருந்து 50 வருடங்களுக்கு முந்தைய ஒரு பெண் ரோபோவின் தலையை கண்டெடுக்கிறார். அதற்கு கை, கால், உடம்பு பொருத்துகிறார். அதோடு மனித உணர்வுகளையும் அதற்குள் செலுத்துகிறார். அப்படி உருவான இளம்பெண்தான் அலிடா. அதாவது நம்ம சிட்டி மாதிரி.


எதையும் சமாளிக்கும் அசாத்திய திறமை கொண்ட பெண்ணாக இருக்கிறாள் அலிடா. உலோக நகரத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு ஆட்டம்போடும் வில்லன்களை அவர் எப்படி ஜெயிக்கிறார் என்பதும். அவருக்கும் ஒரு காதல் வருகிறது. அந்த காதல் என்னாகிறது என்பதும்தான் படத்தின் கதை.


படத்தின் துவக்க நொடியில் இருந்து எண்ட் கார்ட்டு வரைக்கும் கிளைமாக்ஸ் எபெக்டோடு படமாக்கி இருக்கிறார்கள். உலகம் முழுவதும் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிற இந்தப் படம் அதே பிப்ரவரி 5ந் தேதி தமிழிலும் வெளிவருகிறது. 3டி, ஐமேக்ஸ் 3டி தொழில்நுட்பத்திலும் வெளிவருகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஹீரோயின் ஆனார் நிரஞ்சனி அகத்தியன்ஹீரோயின் ஆனார் நிரஞ்சனி அகத்தியன் முருகனை தரிசித்த திருப்தியில் யோகி பாபு முருகனை தரிசித்த திருப்தியில் யோகி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Andha Nimidam
    • அந்த நிமிடம்
    • நடிகர் : புதுமுகம்
    • நடிகை : புதுமுகம்
    • இயக்குனர் :குழந்த ஏசு
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    Tamil New Film En Kadhali Scene Podura
    Tamil New Film Pettikadai
    • பெட்டிக்கடை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :இசக்கி கார்வண்ணன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2019 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in